சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச் சினை காரணமாக அங்கி ருந்து வெளியேறி கடந்த 12 ஆண்டுகளாக கொல் கத்தாவில் வசித்து வந்தார்.
அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் போராடி வந்தனர். அவர் மற்ற மாநி லங்களுக்கு சென்ற போதும் அங்கும் அவரை தாக்க முயற்சிகள் நடந்தன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல் கத்தாவில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இதில் வன்முறை வெடித்தது.
இதனால் அவரை மாநில அரசு ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. ராஜஸ் தான் அரசு அவரை ஏற்க மறுத்து டெல்லிக்கு அனுப்பியது. இப்போது மத் திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதால் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அவரை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளி யேற்ற வேண்டும் என்று சில அமைப்புகள் தொடர்ந்து வற் புறுத்தி வருகின்றன.
இதற்கிடையே தஸ்லிமா நஸ்ரின் டெலிபோன் மூலம் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அவர் கூறியதாவது:-
கடந்த 7 மாதமாக நான் துயரத்தில் சிக்கி தவிக்கிறேன். பாதி உயிர் போய் இப்போது நடை பிணமாகி விட்டேன்.
எனவே இந்தியாவில் இருந்து வெளியே முடிவு செய்திருக் கிறேன். ஆனால் எந்த நாட்டுக்கு செல்லப்போகிறேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நான் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன். இப்போது நான் இந்த முடிவை எடுப்பதை தவிர வேறு வழியில்லை.
12 ஆண்டுக்கு முன்பு இங்கு வந்து தங்கினேன். அதில் இருந்து இந்தியாவை எனது சொந்த நாடாக கருதுகி றேன்.
இப்போது மன அழுத்த தாலும், மன நெருக்கடியாலும் சிக்கி தவிக்கிறேன். என் கண்கள் பாதிக்கப்பட்டு விட் டன. குருடாகி கொண்டிருக் கிறேன்.
இதே சூழ்நிலையில் இந்த நாட்டில் தங்கி இருந்தால் எனது நிலைமை மோசமாகி விடும். உயர் ரத்த அழுத்தம் வந்து விடும். இதயமும் பாதித்து விடும்.
கொல்கத்தா எனது சொந்த வீடு நான் உயிரோடு இருந்தால் மீண்டும் இங்கு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.