தமிழ் நாட்டில் பொடாச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் மீதுள்ள வழக்குகள் இன்னமும் வாபஸ் பெறப்படவில்லை என நான் சாட்டிய குற்றச்சாட்டுக்களை கவனத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் கருணாந்தி செயற்படுகிறார் என சீறிப்பாய்ந்திருக்கிறார் பழ.நெடுமாறன் .
பொடா வழக்குகளை தமிழக அரசே நேரிடியாகத் திரும்ப பெற்றுவிட முடியாது சிறப்பு நீதி மன்றம்தான் அதம் மீது தீர்ப்புக் கூற முடியும் . அரசைப் பொறுத்த வரையில் வழக்குகளை திரும்ப பெறுவதாக சிறப்பு நீதி மன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும் நீதி மன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என முதலமைச்சர் கருணாநிதி உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார் . என பழ.நெடுமாறன் ஆத்திரம் அடைந்துள்ளார்