இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில், குறைந்தது 12 பேருக்காவது காயம் ஏற்பட்டுள்ளது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
ஸ்ரீநகரின் வர்த்தக வட்டாரத்துக்கு அருகே மேம்மாலம் ஒன்றில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளே வெடித்துள்ளது.
அங்கு பல மாதங்களாக நிலவிய அமைதியை இந்தக் குண்டு வெடிப்பு குலைத்துள்ளது.
காஷ்மீருக்கு சுதந்திரம் கோரும் தீவிரவாதிகள், சுமார் 20 வருடமாக போராடி வருகிறார்கள்