தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது.2008-09 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாத்தத்துக்காக தமிழக சட்ட சபை இன்று காலையில் கூடியது.நிதி அமைச்சர் அன்பழகன் வரவு செலவுத்திட்டத்தை பேரவையில் தாக்கல் செய்ய முற்பட்ட போதே அ.தி.மு.க துணைத் தலைவர் பன்னீர் செல்வம் அரசுக்கு எதிராக சில கருத்துகளை முன்வைத்து சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதக அறிவித்தார் இதை தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்திகளிடம் கருத்து தெரிவித்த பன்னீர் செல்வம் தமிழ் நாட்டில் சட்டம் வழங்கு சீர் குலைந்து உள்ளது இதை கண்டித்த நாங்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.