தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிப்காட் தொழிற் பேட்டைப் பகுதியில் ஏற்படும் ரசாயன மாசுபாடு குறித்து ஆய்வு செய்த இந்திய நடுவணரசின் நிதி உதவி பெறும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையமான நீரி என்கிற நிறுவனம், தனது அறிக்கையை கடந்த ஆண்டு தமிழக அரசின் மாசுகட்டுப்பாட்டு நிறுவனத்திடம் கையளித்தது.
ஆனால், தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மாசுபாட்டை எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டுவரும் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர்கள் என்கிற அமைப்பு, இந்த அறிக்கையை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.
காற்று மாசுபட்டிருப்பதன் காரணமாக இந்தப் பிரதேசத்தில் புற்று நோய் தாக்கும் அபாயம் பல மடங்கு அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் உள்ள மற்ற பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து சமூக சுற்றுசூழல் கண்காணிப்பாளர்கள் அமைப்பின் ஆலோசகர் நித்யானந்த் ஜெயராம் அவர்கள்,