முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமையில் வெள்ள நிவாரண பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடந்தது.
இதில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கன் அன்பழ கன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், அன்பரசன், கே.பி.பி.சாமி, தலைமை செயலாளர் திரிபாதி, நிதித்துறை செய லாளர் ஞானதேசிகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் முதல்- அமைச்சர் கருணாநிதி நிரு பர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவாரூர், தஞ்சை, நாகை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட் டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சேதங்கள் குறித்து உடனடியாக விவாதித்து நிவாரணப் பணிகளை செய் வது குறித்து ஆலோசிக்க அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட்டம் இன்று அவசரமாக கூட்டப்பட்டது.
மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்பு கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேத விபரங்கள் குறித்து அறிந்து கொண்டிருக்கிறோம். அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்துக்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை கிடைத்த சேத விவரங்கள்படி உயரிழந்தோர் எண்ணிக்கை 9. இறந்த கால் நடைகள்-57.
பாதிக்கப்பட்ட வருவாய் கிராமங்கள் 270. முழுவதும் மூழ்கி சேதம் அடைந்த கிராமங்கள் 10. மேடான பகுதிகளுக்கு குடிபெயர்ந்து இருப்போர் எண்ணிக்கை 2210 பேர்.
சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலப் பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 2 ஆயிரத்து 22 கிலோ மீட்டர் சாலை சேதம் அடைந்துள்ளது. 202 பாலங்கள் சேதம் அடைந்துள் ளன.
204 ஏரி, ஆறுகள் உடைந்து சேதம் ஆகி உள்ளன.
268 குடிசை வீடுகள் அழிந்து விட்டன. இது தவிர மேலும் பாதிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து தகவல்கள் வந்து கொண் டிருக்கின்றன.
இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடி வின்படி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி:- இந்த மழையில் ஏற்பட்ட மொத்த சேதம் எவ்வளவு?
பதில்:- சேத விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
கே:- கடந்த முறை ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கி விட்டதா?
ப:- பரிசீலித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். உடனடியாக கிடைக்காவிட்டாலும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
கே:- நீங்கள் கேட்ட ரூ. 1,500 கோடி கிடைக்குமா?
ப:- மத்திய குழு வந்து பார்வையிட்டபோது சேதம் நாங்கள் கூறியதை விட குறைவு என்று தெரிய வந்தது. அந்த தொகை நிச்சயம் கிடைக்கும்.
கே:- அமைச்சர்கள் வெள்ள நிவாரண பணிகளை செய்யும்போது மத்திய குழுவையும் அழைத்துச் சென்றால் முழு தொகையும் கிடைக்குமே?
ப:- நல்ல யோசனை.
கே:- இந்த வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு வருமா?
ப:- பெரிய அளவில் சேதம் இல்லை. மாநில அரசே நிதி ஒதுக்கி விட்டது.
கே:- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படுமா?
ப:- ரூ. 2 ஆயிரம் கொடுக்கிறோம். பொருட்களும் கொடுக்கப்படுகின்றன.
கே:- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1,500 தான் வழங்கப்படுகிறது. இந்த தொகை அதிகரிக்கப்படுமா?
ப:- இது மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை கூடுதலாக இழப்பீடு வழங்க வற்புறுத்துவோம்.
கே:- மழையால் நெல் நனைந்து இருக்கிறது. எனவே கொள்முதலின் போது ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
ப:- எல்லாவிதமான நிவாரணமும் வழங்கப்படும்.
கே:- வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுமா?
ப:- விவசாய தொழிலாளர் வாரியம் மூலம் உதவி வழங்கப்படும்.
கே:- இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என்றாலும் விவசாயிகளுக்கு பயன் இல்லை என்று சிலர் கருத்து கூறுகிறார்களே?
ப:-அவர்கள் விவசாயிகள் இல்லை.
கே:- பல மாவட்டங்களில் பொறியியல் கல்லூரிகள் தொடக்கப்படுகின்றன. ஆனால் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
ப:- எல்லா கல்லூரிகளுக்கும் அரசுதான் நிதி வழங்குகிறது.
கே:- அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வரும் என்று கூறப்படுகிறதே?
ப:- தெரியாது.
கே:- மத்திய மந்திரி சரத்பவார் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இப்போதுள்ள கூட்டணியே நீடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறாரே?
ப:- நல்ல கருத்து சொல்லி இருக்கிறார். நான் என்ன சொல்வது.
கே:- வக்கீல் ஜோதி தி.மு.க.வில் சேர்ந்ததால் ஜெயலலிதா வழக்குகளில் திருப்பம் ஏற்படுமா?
ப:- இந்த கேள்விக்கு ஜோதி நேற்றே நாகரீகமான பதிலை சொல்லி இருக்கிறார்.
கே:- கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடும் முறை சரியா?
ப:- ஏற்றுக் கொள்ளவில்லை.
கே:- மத்திய திட்டக்குழுவில் தமிழக அரசுக்கும் இடம் வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா?
ப:- சென்ற ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போதே இதை கூறி இருக்கிறோம். மாநில அரசு திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீடு இன்னும் பல அதிகாரங்களும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். அண்ணாவும் இந்த கருத்தை வற்புறுத்திதான் மாநில சுயாட்சி வேண்டும் என்று கூறினார்.
இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.