ஸ்ரீலங்காவிலும் தளத்தைக்;கொண்ட அல் ஜசிரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புகளை இந்தியா தமது நாட்டுக்குள் தடைசெய்துள்ளது. இந்த சேவை இந்திய உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தே இந்தியா அதன் ஒளிபரப்புகளை தமது நாட்டில் தடைசெய்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
தென்னாசியாவில் இந்தியாவின் நகர்வுகளை மிகவும் நெருக்கமாக அல் ஜசிரா கண்காணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அல் ஜசீரா ஒளிபரப்புகளை இந்தியா தடைசெய்துள்ளமையால், 151 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் அந்த ஒளிபரப்பை பார்க்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா மாத்திரமே அல் ஜசீரா ஒளிபரப்பு இடமளித்து மத்திய கிழக்கு மக்களுக்கான சேவையை நடத்த உதவியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.