News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

விஜயகாந்த் திடுக் புகார்

24-03-2008
Article by:
Pradeep

கூட்டணிக்கு நிர்ப்பந்திக்கும் வகையில் எனக்கு அடுக்கடுக்கான தொல்லைகளை கொடுக்கிறார்கள்; என்னை அசிங்கப்படுத்த பத்திரிகை களில் செய்தி வெளியிடச் செய் கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
.
மக்களுடன் தான் கூட்டணி என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். என்னை விட்டுவிட வேண்டியது தானே. ஏன் திரும்பத்திரும்ப தொல்லை தருகிறீர்கள்? என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தென்சென்னை மாவட்ட தேமுதிக பொருளாளர் கே.எஸ்.மலர்மன்னன் சகோதரர் எஸ்.நாகராஜன் எஸ்.யோகலட்சுமி திருமணம் இன்று காலை கோடம்பாக்கத்திலுள்ள ஸ்ரீபத்மராம் மஹாலில் நடைபெற்றது.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இந்த திருமணத்திற்கு தலைமை தாங்கி மங்கல நாணை எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
 
பின்னர் மணமக்களை வாழ்த்தி விஜயகாந்த் பேசியதாவது: தென்சென்னை மாவட்ட பொருளாளர் மலர்மன்னன் தன்னுடைய சகோதரரின் திருமணம் என்னுடைய தலைமையில் நடக்க வேண்டும் என்றார். அதற்கு நான், என்னுடைய தலைமையில் திருமணம் நடந்தால் சில சங்கடங்கள் இருக்குமே, உங்களுடைய உறவினர்கள் வருவார்களே என்றேன். அதற்கு அவர், பரவாயில்லை என்ற தோடு என்னுடைய மனைவியையும் திருமணம் நடத்தி வைக்க அழைப்பு விடுத்தார்.
 
நான் எங்கு சென்றாலும் எப்போதும் எனக்கு பாதுகாப்பு என்பதே கிடையாது. அதனால் தான் பாதுகாப்புக்கு தொண்டர்ப்படையை  அழைத்து வருகிறேன்.  அவர்கள் கருப்பு நிற உடை அணிந்திருப்பதால் கருப்பு பூனைப்படை என்று யாரும் நினைக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய தொண்டர்கள் தான். எனக்கு பாதுகாப்பே என்னுடைய தொண்டர்கள் தான். அதனால் தான் தைரியமாக வந்து செல்கிறேன்.
 
அரசியலில் என்னை எப்படியெல்லாமோ பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் நான் கவலைப்படு வது கிடையாது. என்னை பற்றி யார் யாரை விட்டோ பேச விடுகிறார்கள்.  அவர்கள் என்னை பற்றி பேசுவ தெல்லாம் அவர்கள் பெற்ற பதவிக்காக தான். இவ்வாறு பதவிக்காக பேசுபவர் களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். திருமண வீட்டை  நான் அரசியலாக்க விரும்பவில்லை.
 
நானும், என் மனைவியும் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து நல்ல முறையில் குடும்பம் நடத்தி வருகிறோம். இதை புது மணமக்களும் கடைபிடிக்க வேண்டும். கணவர் கோபமாக வந்தாலும் மனைவி விட்டுக் கொடுத்து பேச வேண்டும். அதே போல கணவரும் தன்னுடைய கோபத்தை மனைவியிடம் காட்டக்கூடாது.
 
இன்றைக்கு சிறிய அளவில் இடம் வைத்திருந்தாலேஅதாவது ராம் தியேட்டர் அளவு இடம் வைத்திருந்தாலே பண்ணை என்று சொல்கிறார்கள். 100 ஏக்கர் இடம் வாங்கும்போது அதில் 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருக்கக்கூடும். எனக்கு விற்றவர்கள் ஏமாற்றி விற்றிருக்கலாம். அதே சமயம் கிராம அதிகாரியும் ஏமாற்றி கையெழுத் திட்டுள்ளார்.
 
அதனால் தான் நான் சொன்னேன் புறம்போக்கு நிலம் இருந்தால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று. ஆனால் அதைவிட்டுவிட்டு என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியிட செய்கிறார்கள். அவர்களால் அது மட்டும் தான் முடியும். ஆனால், மக்களுக்கு உண்மை புரியும்.
 
நான் வாங்கிய இடத்தை இவர்களை போல கொள்ளையடித்து வாங்க வில்லை. உழைத்து சம்பாதித்த  பணத்தில் தான் வாங்கி இருக்கிறேன். விஜயகாந்த் பெயரை கெடுக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். என்னிடம் துளிகூட களங்கம் கற்பிக்க உங்களால் முடியாது.
 
இந்த பழிவாங்கும் செயலுக்கு காரணம், எப்படியாவது கூட்டணிக்கு சேரமட்டேனா என்பது தான். நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். அன்று சொன்னது போலவே, தெய் வங்களையும், மக்களையும் நான் நம்பு கிறவன். நீங்கள் வேண்டுமானால் தெய்வத்தை பார்க்க முடியாது. ஆனால் நான் தினமும் மக்களாகிய தெய்வத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
 
கூட்டணி இல்லை என்று பல முறை சொல்லிவிட்டேன். என்னை விட்டுவிட வேண்டியது தானே. ஏன் திரும்பத்திரும்ப தொல்லை தருகிறீர்கள்?  நான் பணத்திற்கு ஆசைப்படுபவன் அல்ல. போகும்போது யாரும் பணத்தை கொண்டு செல்வதும் கிடையாது. நாம் இறந்தால் ஆறடி தான். இப்போது அதுகூட கிடையாது. எரித்துவிடுகிறார்கள்.
 
இன்றைக்கு தங்கம் ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்திற்கு விற்கிறது. என் தொண்டர்கள் யாரும் வரதட்சணை கேட்க கூடாது வரதட்சணை எப்போது ஒழிகிறதோ. அப்போது தான் நல்லது பிறக்கும். மணமக்கள் ஒற்றுமையை கடைபிடித்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
 
இந்த திருமண நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் ஆர்.சுந்தரராஜன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions