News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக சோனியா மீது வழக்கு

28-03-2008
Article by:
Pradeep

துர்கா உருவத்தில் சோனியாவை சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, சோனியா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
துர்கா உருவத்தில் சோனியா
 
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீல் சுதிர் ஓஜா என்பவர், ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
 
உத்தரபிரதேச மாநிலம் முரதாபாத் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜுன் 21-ந் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை துர்கா உருவத்தில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்தப்படம், அப்போதே தொலைக்காட்சிகளில் படம் பிடித்து ஒளிபரப்பப்பட்டது. பத்திரிகைகளும் வெளியிட்டன.
 
அந்த போஸ்டரை முரதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் இணைந்து தயாரித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து சோனியா காந்தியும் குற்றச்சதியில் ஈடுபட்டுள்ளார். இந்த போஸ்டரால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது.
 
ஆகவே, சோனியா உள்ளிட்ட மூவர் மீதும் இ.பி.கோ. 295, 295(ஏ) (மத உணர்வுகளை புண்படுத்துதல்), 120(பி) (குற்றச்சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.
 
அடுத்த மாதம் விசாரணை
 
இந்த மனு, மாவட்ட நீதிபதி எச்.கே.ஸ்ரீவஸ்தவா முன்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை அவர் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். மேலும், அதை விரைவு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். விரைவு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் இம்மனு விசாரணைக்கு வருகிறது.
 
 
 
 

 Other Articles
•  12 May 2008 10:17:00 சிம்ரன்-பரத் போட்டி
•  12 May 2008 10:14:00 வார்ன் அணி மீண்டும் வெற்றி
•  12 May 2008 10:12:00 போலீசாருக்கு சலுகைகள்
•  12 May 2008 10:10:00 சீனாவில் கடும் நிலநடுக்கம்
•  12 May 2008 10:08:00 பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கக்வில்லை
•  12 May 2008 10:05:00 மலேசிய ஓட்டலில் தமிழர்கள் அவதி
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:41:00 கனேடிய பொலிஸாரின் குற்றச்சாட்டுக்களை உலகத் தமிழர் பேரவையின் ரொரன்ரோ கிளைத் தலைவர் நிராகரி
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 02:05:00 கங்குலி-ஹஸ்ஸி அதிரடியில் கொல்கத்தா 4-வது வெற்றி
•  12 May 2008 01:56:00 திரிஷா திடீர் சம்பள குறைப்பு
•  12 May 2008 01:40:00 குஷ்புவிற்கு அம்மா வேடம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions