இந்தியாவில்காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் இந்திய அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக பாரதீய ஜனதாகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்க வேண்டும் என பாரதீய ஜனதாகக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களான வெங்கையா நாயுடு மற்றும் அருண் ஜெய்திலி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பயிற்சி மற்றும் நிதியுதவிகளை வழங்கி அவர்களைப் பலப்படுத்தியதுடன் இந்திய அமைதி காக்கும் படையினரை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்தது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இந்தியாவில் நக்ஸலைட் போன்ற பயங்கரவாத குழுக்கள் தோற்றம் பெற்றதற்கும் காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதனால் பயங்கரவாதம் குறித்து பேசுவதற்கும் பாரதீய ஜனதாகக் கட்சியை விமர்சிப்பதற்கும் காங்கிரஸ் கட்சிக்கு தகுதி கிடையாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.