News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இந்திய, கத்தார் வர்த்தக உறவுக்கு வயது 5000 ஆண்டுகள்

29-03-2008
Article by:
Pradeep

சமவெளி நாகரீக காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒரு கல்லறைத் தோட்டம், கத்தாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய துணைக் கண்டத்திற்கும், மெசபடோமியா, அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே நீண்ட வர்த்தக தொடர்பு இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 
கத்தாரில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிந்து சமவெளி காலத்தில் இருந்ததைப் போன்ற தோட்டமாக உள்ளது.
 
இதன் மூலம் இந்தியாவுக்கும், அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்புகள் நீண்ட காலமாக இருந்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் முகம்மது அலி அல் சுலைதி கூறுகையில், கத்தாரின் வட மேற்கு கடற்கரைப்பகுதியில் இந்த கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்லறைத் தோட்டம் சிந்து சமவெளி நாகரீக காலத்தில்தான் இருந்தது.
 
மேலும், இப்பகுதியில் தற்காலிக குடியிருப்புகளும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் அரேபிய துணைக் கண்டத்திற்கு வர்த்தக ரீதியிலான பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.
 
சிந்து வெளிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தகம் தொடர்பாக இங்கு வந்திருக்க வேண்டும். போர்சலின் உள்ளிட்டவற்றை இங்கிருந்து வாங்கி தங்களது பகுதிக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
 
மிகப் பெரிய அளவில் இரு துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
 
இந்த கல்லறைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏராளமான தற்காலிக குடியிருப்புகள் உள்ளன. வர்த்தகர்கள் வந்து தற்காலிகமாக இங்கு தங்கிச் செல்ல இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 
இதேபோன்ற தற்காலிகக் குடியிருப்புகள் குவைத், அபுதாபியிலும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

 Other Articles
•  14 May 2008 15:45:00 தெல்லிபளை யூனியன் கல்லூரி இரண்டு நாட்கள் இயங்கவில்லை!
•  14 May 2008 15:34:00 கருணா விடயத்தில் சட்டம் பதிலளிக்கும்?
•  14 May 2008 15:24:00 மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்
•  14 May 2008 15:12:00 13 நாட்களில் 41 படையினர் பலி: 155 பேர் காயம்
•  14 May 2008 15:03:00 திருகோணமலையில் நான்கு நாட்களில் நான்கு பேர் கடத்தல்
•  14 May 2008 14:49:00 சட்டம் என்பது யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை சிறிலங்காப் படையினரின் கைகளிலேயே உள்ளது
•  14 May 2008 14:39:00 இராணுவத் தீர்வில் நான் நம்பிக்கை கொண்டவன் அல்ல - மகிந்த ராஜபக்ச
•  14 May 2008 13:46:00 இயக்குனரை கைவிடாத ஜீவன்
•  14 May 2008 13:44:00 தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
•  14 May 2008 13:43:00 'ஹின்ட்ராப்' தலைவர்களை விடுவிக்க மறுப்பு
•  14 May 2008 13:40:00 தசாவதாரம் : நீதிமன்றத்தில் வெளியான 'ரகசியங்கள்'!
•  14 May 2008 13:38:00 பூங்கோதை ராஜினாமா
•  14 May 2008 13:37:00 இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் நியமனம்-போலீசாரை தேர்வு செய்ய டி.ஜி.பிக்கு அதிகாரம்
•  14 May 2008 13:34:00 அக்தர் அமர்க்களம்
•  14 May 2008 13:29:00 தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு - கிழக்கிலிருந்து கொண்டுவர நடவடிக்கை
•  14 May 2008 13:26:00 முக்கியமான பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை
•  14 May 2008 13:24:00 புதிய கட்சி இன்று துவக்கம்
•  14 May 2008 13:19:00 சிறிலங்காப் படையினரால் இடம்பெயர்ந்த மக்கள் அசுறுத்தல்
•  14 May 2008 13:18:00 மகேஸ்வரியின் சடலம் எந்த அடிப்படையில் கொழும்பு கொண்டு செல்லப்பட்டது
•  14 May 2008 13:15:00 புலிகளின் தலைவரை அழிக்கும் நோக்கத்தை எமது படையினர் நெருங்கியுள்ளனர்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions