News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

சொத்து வரியை உயர்த்தியது ஜெயலலிதா தான்

29-03-2008
Article by:
Pradeep

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வருமாறு:-
 
கேள்வி:- "எதற்கெடுத்தா லும் போராடுவேன்'' என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் அறிக்கை விட்டுக் கொண்டிருக் கிறாரேப
 
பதில்:-"காலையில் கைது - மாலையில் விடுதலை'' என்ற நிலை தொடரும் வரையில் இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டு தானிருக்கும்.
 
கே:- ஏழை ஆதி திராவிடர் களுக்கு இலவசமாக வீடுகட்டித்தரும் திட்டம்; மாநில அரசின் திட்டமா? அல்லது மத்திய அரசின் திட்டமா?
 
ப:-இதைப்பற்றி இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் - பக்கம் 38-39இல் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அது வருமாறு:-"ஏழை ஆதிதிராவி டர்களுக்கு நிரந்தர வீடுகள் இலவசமாகக் கட்டித் தரும் திட்டம், தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞரால் 1974 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அன்றைய மத்திய உணவு அமைச்ச ராகத் திகழ்ந்த பாபு ஜெக ஜீவன்ராமனால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், மத்திய அரசால் பின்னர் `இந்திரா வீட்டுவசதித் திட்டம்' என்னும் பெயரில் நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டது.
 
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டுக்கு மத்திய அரசின் செலவு மதிப்பீடான ரூபாய் 25 ஆயிரத்துடன், கான்கிரீட் கூரை அமைப்பதற்காக நமது மாநில அரசு கூடுதலாக ரூபாய் 12,000 வழங்கி வரு கிறது. கட்டுமானச் செலவு கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இவ்வீடுகளுக்கான செலவு மதிப்பீடு உயர்த்தப் பட வேண்டுமென அண்மை யில் நடைபெற்ற தேசிய வளர்ச் சிக்குழு கூட்டத் தில் முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இதனை ஏற்று, இவ்வீடுகளுக் கான மதிப்பீட்டை, வீடு ஒன்றுக்கு ரூபாய் 25,000 லிருந்து ரூபாய் 35,000 ஆக மைய அரசு அண்மையில் அதன் நிதிநிலை அறிக்கையில் உயர்த்தியுள்ளது. இந்த வகையில், கான்கிரீட் கூரை அமைப்பதற்கான செல வினங்களில் ஏற்பட்டுள்ள உயர்வையும் கருதி, இதற்காக மாநில அரசு வழங்கும் மானியத்தையும், ரூபாய் 12,000-லிருந்து ரூபாய் 20,000 ஆக வரும் ஆண்டிலிருந்து இந்த அரசு உயர்த்தி வழங்கும். இதனால் அரசுக்குக் கூடுதலாக ரூபாய் 56 கோடி செலவு ஏற்படும். இத்திட்டத்தின் கீழ், மாநில அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் கான்கிரீட் கூரை அமைப்பதற்கான உதவி ஆகியவற்றிற்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வரும் ஆண்டில் தலா ரூபாய் 55,000 செலவில் சுமார் 70,000 வீடுகள் ஊரகப் பகுதிகளில் கட்டப்படும். இதில் மத்திய அரசின் பங்கு ரூபாய் 26,250 ஆகவும் மாநில அரசின் பங்கு ரூபாய் 28,750 ஆகவும் இருக்கும்.''
 
இதிலிருந்து மக்கள் நலப் பிரச்சினைகளில் மத்திய மாநில அரசுகள் குறுகிய கண்ணோட்டமின்றி, திறந்த மனத்துடன் செயல்படுவதற்கு டெல்லியிலும், சென்னை யிலும் இன்றைக்கு இருக்கிற அரசுகள் சான்றாக விளங்கு வதை, சாதாரண மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார் கள்.
 
கே:-1.4.2008 முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிப்பகுதிகளில் சொத்து வரி மாற்றி அமைக்கப்பட வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளதாக ஜெயலலிதா அறிக்கை வெளி யிட்டிருக்கிறாரேப
 
ப:- சொத்து வரி என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்ப டையான வருவாய் ஆதா ரங்களில் ஒன்றாகும். பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் சொத்து வரியை சீரமைக்க வேண்டுமென்று முடிவெடுத்து, வழிகாட்டி நெறிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டி நெறிமுறை களின் படி குடியிருப்பு வீடு களுக்கு 25 சதவிகிதம் - தொழில் கட்டடங்களுக்கு 100 சதவிகிதம்-வணிக நிறுவனக் கட்டடங்களுக்கு 150 சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்திக் கொள்ள வழி வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த நகரங்களின் தேவைக் கேற்ப சொத்து வரியை தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ள லாம். தேவை இல்லை யெனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை ஏற்கனவே இருந்த அளவிற்கே வசூலித்துக் கொள்ளலாம். அரசு உயர்ந்த பட்ச சதவிகிதத்தை மட்டுமே வகுத்தளித்துள்ளது. இதனை உயர்த்தித்தான் ஆக வேண்டு மென்று எந்தவிதமான கட்டாயமும் கிடையாது. உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமேயானால் அதற்கு போதிய நிதி தேவை. எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி உதவி செய்திட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து சொல்லப் பட்டு வருகிறது என்பதையும் மறந்து விட முடியாது. அதே நேரத்தில் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களுடைய சொந்த வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் இது போன்ற அறிவிப்புகள் செய்யப்படும்போது எதிர்த் தால் உள்ளாட்சி அமைப்பு களால் எந்தவிதமான நற்பணி களையும் ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
 
உதாரணமாக ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப் புத் திட்டத்தின்கீழ் இது வரை 177 திட்டங்களுக்கு 5460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 140 பேரூராட்சிகளில் இந்த ஆண்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாதாள சாக்கடைத் திட்டங்களை செயற் படுத்திட 1362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துச் சாலைகளும் மேம்படுத்தப்படுவதோடு நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலைகளின் அடியில் குழாய்களைக் கொண்டு செல்வதற் கான வசதிகளை ஏற்படுத்த 1000 கோடி ரூபாய்ச் செலவில் பணிகள் மேற்கொள் ளப்படவுள்ளன.
 
இத்தகைய திட்டங்களை யெல்லாம் நிறைவேற்றிட உதவியாகத் தான் சொத்து வரியை விரும்புகின்ற உள் ளாட்சி நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப உயர்த்திக் கொள்ள உச்சவரம்பு நிர்ணயித்து அறிவிக்கப் பட்டுள்ளன. உயர்த்தியே ஆகவேண்டுமென்று எந்தவித மான நிர்ப்பந்தமும் கிடை யாது. இதனைத்தான் ஜெயலலிதா உயர்த்தக் கூடாது என்று அறிவித்திருக்கிறார். அதாவது உள்ளாட்சிப் பகுதிகளில் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற வேண்டாமென்று மறைமுகமாகக் கூறுகிறார் என்று பொருள்.
 
சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இதே ஜெயலலிதா தான், அவர் ஆட்சியிலே இருந்தபோது 1993-ஆம் ஆண்டில் குடியிருக்கும் கட்டிடங்களுக்கு 100 சதவிகி தத்திற்கு மிகாமலும், தொழில் மற்றும் வணிக உபயோகக் கட்டிடங்களுக்கு 150 சதவிகிதத்திலிருந்து 200 சதவிகிதத்திற்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தார். அதனை அப்ப டியே மறந்து விட்டு, தற்போது சொத்து வரியை உயர்த்தலாமா என்கிறார் ஜெயலலிதா.
 
கே:-காங்கிரஸ் உறுப்பினர் போளூர் வரதன் பேச்சை சில ஏடுகள் அவர் அரசை தாக்கியதைப் போலவும், முதியோர் உதவித்தொகையை மத்திய அரசு தான் தருகிறது என்பதைப் போலவும், அந்தத் திட்டங்களை காங்கிரஸ் காரர்கள் சொல்லத்தவறிய தால் ஆட்சிக்கு வந்து விட்ட தைப் போலவும் வெளியிட்டுள் ளனவே?
 
ப:- போளூர் வரதன் அவர் களின் முழுப்பேச்சையும் நான் படித்துப்பார்த்தேன். அவர் ஆட்சியை பாராட்டிப் பேசிய பகுதிகள் தான் அவரது பேச்சிலே அதிகமாக உள்ளது. ஆனால் ஏடுகள் அவற்றை யெல்லாம் விட்டு விட்டு சில பகுதிகளை மட்டும் வெளியிட்டுள்ளன. குறிப்பாக அவர் பேசும்போது, "ஒரு சமுதாயத்தினுடைய வளர்ச்சியை மனதிலே கொண்டு கலைஞர் இன்றைக்கு இந்த நிதிநிலை அறிக்கையைத் தீட்டி யிருக்கிறார்கள் என்பது தானே உண்மைப அதை ஏற்றுக் கொள்ளுங்கள்''-"தமிழுக்கு முதலிடம் கொடுப் பவர்கள் யார் என்று சொன்னால், எல்லோரும் வேண்டுமானால், வீம்புக்கு வேண்டுமானால் பேசலாம். தமிழகத்திலே இன்றைக்கு ஒரேயொரு மனிதன், கலைஞரால் களால் மட்டும் தான் தமிழைத் திறமையாகப் பேசமுடியும் என்பதை உலக வரலாறு இன்றைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறது. நான் யாருக்கும் துதி பாட வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் யாருக்கும் ஐஸ் வைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் யார் வீட்டு வாசலிலேயும் கை கட்டாதவன், மனதிலே பட்டதைச் சொல்லக் கூடியவன்'' - என்றெல்லாம் பேசியதை விட்டு விட்டு வேண்டுமென்றே சில ஏடுகள் அவரது பேச்சை திரித்து வெளியிட்டுள்ளன.
 
கே:- இந்தியக் கம்ïனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக நான்காவது முறையாக தோழர் ஏ.பி. பரதன் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளாரே?
 
ப:-அதற்கு எல்லா வகை யிலும் பொருத்தமானவர். அவரது நீண்ட அனுபவமும் நேர்மையான செயல்பாடும் அந்தக்கட்சியை கட்டிக் காத் திடும் கேடயங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்த நேரத்திலும் கூட, அதனை வெல்லக்கூடிய ஆற்ற லாளர். அந்த 82ஐ இந்த 84 வாழ்த்து கிறது.
 
கே:- இந்தியக் கம்ïனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 19-வது அகில இந்திய மாநாடு கோவையில் நடைபெறு கிறதே?
 
ப:- மாநாட்டிற்கான அழைப்பிதழ் கிடைத்தது. மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கே:- தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய் வதற்காக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தை நோபல் பரிசு பெற்ற பன்னாட்டு சுற்றுச்சூழல் ஆய்வின் தலைவர் ஆர்.கே. பச்சோரி நேற்று திறந்து வைத் திருக்கிறாரே?
 
ப:- அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று அவர் தொடங்கி வைத்துள்ள ஆய்வகம் நாட்டிலேயே முதன் முறையாகத் தொடங்கி வைக்கப்படும் அமைப்பாகும். அதைத் தொடங்கி வைத்த நோபல் பரிசு பெற்ற பச்சோரி அவர்கள் நேற்று மாலை என்னைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார். வெப்ப நிலை அதிகரிப்பால் கடல் நீர் மட்டம் உயர்வது, தண்ணீர் பற்றாக்குறை, வேளாண் பொருட்களின் உற்பத்தி பாதிப்பு, புதிய வகையான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இவற்றையெல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியெல்லாம் விளக்க மாகப் பேசினார். இந்தச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந் தது.
 
இவ்வாறு முதல்-அமைச் சர் கருணாநிதி கூறியுள்ளார்.

 Other Articles
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 12:16:00tamil sports
•  09 May 2008 10:03:00 ஐபிஎல் கிரிகெட் சூதாட்டம் : 10 பேர் கைது
•  09 May 2008 10:01:00 மல்லிகா ஆபாச நடனம்-வழக்கு ஒத்திவைப்பு
•  09 May 2008 09:59:00 கெட்டப் சேஞ்ச் இப்போது இல்லை
•  09 May 2008 09:56:00 மாற்று வழித்தடத்தை அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் யோசனை
•  09 May 2008 09:48:00 நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்
•  09 May 2008 09:47:00 இஸ்ரேலின் பிரதமர் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு
•  09 May 2008 09:45:00 பெரூட்டில் இடம்பெற்ற துப்பாகிக்சூட்டு சம்பவத்தில் 7 பேர் வரை பலி
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
•  09 May 2008 09:37:00 நாளை வாக்களிப்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions