News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்றாக 3-வது அணியை உருவாக்குவோம்

30-03-2008
Article by:
Pradeep

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு, கோவையில் நேற்று தொடங்கியது.
 
6 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழா, கோவை எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது.
 
3-வது அணி
 
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள், பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
 
பா.ஜனதா தலைமையிலான வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள். அமைய இருக்கும் 3-வது அணி, வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டும் இருக்கக்கூடாது; கொள்கைகளை அடிப்படையாக கொண்ட மாற்று அமைப்பாக செயல்பட வேண்டும் என்றும் இடதுசாரி தலைவர்கள் கூறினார்கள்.
 
பிரகாஷ் கரத்
 
பிரகாஷ் கரத் மாநாட்டில் பேசியதாவது-
 
"மக்களுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகள், சமூக நீதி நடவடிக்கைகள், சுயேச்சையான வெளியுறவு கொள்கையில் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படக்கூடிய ஜனநாயக-மதச்சார்பற்ற கட்சிகளுடன் அமையும் மாற்று அணிதான் (3-வது அணி) மதவாதத்துக்கு எதிரான உறுதியான கூட்டணியாக இருக்கும். 3-வது அணி அமைப்பது தொடர்பாக எத்தகைய முயற்சிகள் மேற்கொள்வது என்பது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படும்.''
 
இவ்வாறு பிரகாஷ் கரத் கூறினார்.
 
தொடக்கத்தில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஆர்.உமாநாத் வரவேற்று பேசினார்.
 
ஏ.பி.பரதன்
 
3-வது அணி அமைப்பது தொடர்பாக, பிரகாஷ் கரத்தின் கருத்தை இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதனும் ஆதரித்து பேசினார். அவர் கூறியதாவது:-
 
"காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, இடதுசாரிகள், ஜனநாயக கட்சிகள் இணையும் மாற்று அணி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் பிரச்சினையில் பொதுவான போராட்டங்கள் மூலம் இந்த அணியை உருவாக்க முடியும்.
 
மற்ற கட்சிகளும் மாற்று அணி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகள் தொடர்பு கொண்டு ஒரே அணியில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இரு கம்ïனிஸ்டு கட்சிகளும் இந்த முயற்சியில் இணைந்து செயல்பட வேண்டும்.''
 
இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார்.
 
முதல்-மந்திரிகள்
 
மாநாட்டில் முதல்-மந்திரிகள் வி.எஸ்.அச்சுதானந்தன் (கேரளா), மாணிக்சர்க்கார் (திரிபுரா), புத்ததேவ் பட்டாச்சார்யா (மேற்கு வங்காளம்), மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீதாராம் யெச்சூரி, ராமச்சந்திரன் பிள்ளை, பிருந்தாகரத், மாநில செயலாளர்கள் என்.வரதராஜன் (தமிழ்நாடு), பினராய் விஜயன் (கேரளா), பீமன்போஸ் (மேற்கு வங்காளம்) உள்பட அரசியல் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
26 நாடுகளை சேர்ந்த 52 பிரதிநிதிகள், தமிழகத்தை சேர்ந்த 49 பேர் உள்பட 722 பிரநிதிகள், மற்றும் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 70 பார்வையாளர்கள், கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர். மாநட்டில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ கோ.வீரய்யன், குன்னிகிருஷ்ணன் உள்பட 11 பேர் கவுரவிக்கப்பட்டனர். வெளிநாட்டு பிரதிநிதிகளும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
 
வெண்மணி ஜோதி
 
நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணியில் இருந்து மாரிமுத்து எம்.எல்.ஏ தலைமையில் கொண்டுவரப்பட்ட வெண்மணி தியாகிகள் ஜோதியை மத்திய குழு உறுப்பினர் மல்லஸ்வராஜ் பெற்றுக்கொண்டார்.
 
மாநாட்டு பந்தலின் அருகில் மாநாட்டு கொடியை கட்டுப்பாட்டு குழு தலைவர் சங்கரய்யா ஏற்றி வைத்தார். விழாவையொட்டி கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 
 
 
 

 Other Articles
•  16 May 2008 02:44:00 'மோதி விளையாட' வரும் தனுஸ்ரீ தத்தா
•  16 May 2008 02:43:00 நயன்தாரா வள்ள்ள்ள்...விஷால் நாட் வெல்
•  16 May 2008 02:41:00 ஹெனின் திடீர் ஓய்வு
•  16 May 2008 02:36:00 உயிரிழப்பு ஐம்பதாயிரமாக அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது
•  16 May 2008 02:07:00 ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
•  16 May 2008 02:06:00 கருணாநிதி பதவி விலகவேண்டுமென்கிறார் ஜெயலலிதா
•  16 May 2008 02:01:00 'இந்தியன் முஜாஹிதீன்' உரிமை கோரியுள்ளது
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 18:11:00 கர்ப்பிணிகளுக்கு சூரியக் குளியல்
•  15 May 2008 17:29:00 மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 16:36:00 19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர்.
•  15 May 2008 16:31:00 பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டம-உளவுத்துறை எச்சரிக்கை
•  15 May 2008 16:16:00 5 ஒரு நாள் போட்டி தடை - ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ யின் தண்டனை
•  15 May 2008 16:07:00 சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு - ஜஸ்டின் ஹெனின்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions