News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இனியும் வேடிக்கை பார்க்க முடியாது

31-03-2008
Article by:
Pradeep

சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பா.ம.க.நிறுவனர் ச.ராமதாஸ்
 
கடிதம் எழுதியுள்ளார். தமிழர் சிக்கல் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுடன் சேர்ந்து இரு நாள்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இச்சிக்கல் தொடர்பாக தங்களின் போராட்டங்கள் தொடரும் என ராமதாஸ் பேசினார்.
 
அதன் தொடர்ச்சியாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். வேதனை மிகுந்த உள்ளத்தோடு இக்கடிதத்தை எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரதமருக்கு அவர் சனிக்கிழமை எழுதிய கடிதம்.
 
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களை சிங்கள அரச தன்னிச்சையாக ரத்துசெய்துள்ளது. தமிழர்களுக்கு எதிரான போர்வெறி நோக்கில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குகிறது இலங்கை. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தன்னுடைய மண்ணில் காலூன்ற இடம்கொடுத்துவருகிறது. இலங்கையின் ஆயுதத் தொகுப்பிற்கு இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக அறிகிறோம்.
 

இவற்றைப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு எதிரகப் போரை நடத்துவதுடன், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களையும் தாக்கிவருகிறது. பக்கத்தில் வேறெந்த நாடும் இல்லாத நிலையில் சூப்பர்சானிக் ராகபோர்விமானத்தை இலங்கை வாங்கியிருப்பதாகவம் அறிகிறோம்.
 
யாழ்ப்பாணம் பகுதியில் ஆயிரம் சதுரகிலோமீற்றர் பகுதி மக்கள் யாரும் வாழாத பகுதியாக மாறியிருப்பதற்கு இலங்கை அரசின் போர்நடவடிக்கைகள்தான் காரணம். உள்நாட்டிலேயே 15 லட்சம் பேர் அகதிகளாக இருக்கிறார்கள். இலங்கையில் மனிதஉரிமை அமைப்புக்கள் எல்லாமே கருத்துகூறியுள்ளன.
 
இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்கு ராணுவம் மூலம் தீர்வு காணமுயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆள்கடத்தலும் ஆகும்.
அரசியல் தீர்வு ஏற்பட்டால், இலங்கையில் தமிழர்களின் அரசியல் உறுதியை நிலைநாட்டும் என்பதை அறிந்துதான், சிங்களவர்கள் பேசமறுக்கின்றனர்.
 
இந்நியாவில் உள்ள ஆறுகோடித் தமிழர்கள், பாக்நீரிணைக்கும். மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சகோதர, சகோதரிகள் அழிக்கப்படுவதைப் பார்க்கமுடியாது.
 
எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. இந்தியா இப்போதே செயலாற்றவேண்டும். போர்வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும்.
 
பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்யவேண்டும். பேச்சுநடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 Other Articles
•  16 May 2008 02:44:00 'மோதி விளையாட' வரும் தனுஸ்ரீ தத்தா
•  16 May 2008 02:43:00 நயன்தாரா வள்ள்ள்ள்...விஷால் நாட் வெல்
•  16 May 2008 02:41:00 ஹெனின் திடீர் ஓய்வு
•  16 May 2008 02:36:00 உயிரிழப்பு ஐம்பதாயிரமாக அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது
•  16 May 2008 02:07:00 ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
•  16 May 2008 02:06:00 கருணாநிதி பதவி விலகவேண்டுமென்கிறார் ஜெயலலிதா
•  16 May 2008 02:01:00 'இந்தியன் முஜாஹிதீன்' உரிமை கோரியுள்ளது
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 18:11:00 கர்ப்பிணிகளுக்கு சூரியக் குளியல்
•  15 May 2008 17:29:00 மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 16:36:00 19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர்.
•  15 May 2008 16:31:00 பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டம-உளவுத்துறை எச்சரிக்கை
•  15 May 2008 16:16:00 5 ஒரு நாள் போட்டி தடை - ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ யின் தண்டனை
•  15 May 2008 16:07:00 சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு - ஜஸ்டின் ஹெனின்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions