ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா பயணம் செய்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட திடீர் கோளாறால், ஹெலிகாப்டர் அவசரமாக வயலில் தரை இறக்கப்பட்டது. இதனால் அவர் உயிர் தப்பினார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் நகருக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்குள்ள கோவியில் சாமி கும்பிடுவதற்காக அவர் வந்தார்.
பின்னர், அவர் இச்சாபூர் என்ற இடத்திலுள்ள கோயிலுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அருகேயுள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறப்பட்டது. இதனால் அவர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இதையடுத்து, அவர் கார் மூலம் இச்சாபூருக்கு புறப்பட்டு சென்றார்.