தகவல் தொடர்பு, தொலைக்காட்சி சேவை, விண்வெளி ஆய்வு மற்றும் உளவு பார்க்கும் வேலை போன்வற்றுக்காக இந்தியா செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி நிலை நிறுத்தி வருகிறது.
சென்னைக்கு அருகே ஆந்திரா கடலோர பகுதியான ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. செயற்கைக் கோள்களை விண்ணில் எடுத்துச் செல்ல பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக் களை இந்தியா தயாரித்து வருகிறது.
இதுவரை 12 தடவை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் டுக்கள் மூலம் செயற்கைக் கோள்களை இந்தியா அனுப்பி உள்ளது. கடந்த தடவை 2 செயற்கைக் கோள் கள் ஒரே ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதையடுத்து மேலும் பல நாடுகள் தங்கள் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்த இந்தி யாவின் உதவியை நாடின.
குறிப்பாக கனடா, ஜெர் மனி, ஜப்பான், நாடுகள் தங்களின் மிகச்சிறிய செயற் கைக் கோள்களை விண்ணில் ஏவ இந்தியாவிடம் உதவி கோரின. இதைத் தொடர்ந்து 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண் ணில் செலுத்த இந்திய விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
உலகில் இதுவரை எந்த நாடும் இப்படி ஒரே ராக் கெட் மூலம் 10 செயற்கை கோள்களை விண்ணில் பறக்க விட்டது இல்லை. சவாலான இந்த பணியை வெற்றிகரமாக செய்ய இந் திய விஞ்ஞானிகள் கடந்த பல மாதங்களாக உழைத் தனர்.
மிகவும் நுட்பமாக திட்ட மிடப்பட்டு 44 மீட்டர் உய ரத்துக்கு (12 மாடி கட்டிட உயர அளவு) பி.எஸ்.எல். வி.-சி9 ரக ராக்கெட் உரு வாக்கப்பட்டது. இதன் மொத்த எடை 230 டன். (50 யானைகளின் எடை) இந்த ராக்கெட்டில் திட மற்றும் திரவ எரிப் பொருட்களை நிரப்பும் பணி நேற்று காலை முடிந்தது.
முன்னதாக பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட்டுக்குள் 10 செயற்கைக் கோள்களும் பாதுகாப்பாக வைக்கப் பட்டன. அதை விண்ணில் செலுத்த 52 மணி நேர "கவுண்ட்டவுன்'' நேற்று முன்தினம் தொடங்கியது. பாதுகாப்பு கருதி ஸ்ரீஹரி கோட்டாவை சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு இருந்த கிராம மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத் தப்பட்டனர்.
இன்று அதிகாலை இறுதி கட்ட பணிகள் நடந்தன.ராக்கெட்டின் அனைத் துப் பகுதிகளும் சிறப்பாக இருப்பதை கம்ப்ïட்டர்கள் மூலம் கண்காணித்து வந்த விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. -சி9 ராக்கெட்டை விண்ணில் செலுத்தலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காலை சரியாக 9.23 மணிக்கு 10 செயற்கை கோள் களுடன் ராக்கெட் விண் ணில் செலுத்தப்பட்டது. நெருப்பை கக்கியப்படி சீறிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட் தன் பாதையில் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக பறந்தது. இதை பார்த்ததும் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மூத்த விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ராக் கெட் ஏவும் பணியை சிறப் பாக செய்த அதிகாரிகள் அனைவரையும் "இஸ்ரோ'' தலைவர் மாதவன் நாயர் பாராட்டினார்.
அவர் நிருபர்களிடம் கூறு கையில், "இன்று காலை தட்ப வெப்ப நிலையில் ஏற் பட்ட மாற்றம் சற்று கவ லைப்பட வைத்தது. ஆனால் இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. இந்த சாதனை இஸ்ரோவுக்கு பெருமை அளிக்கிறது'' என்றார்.
பி.எஸ்.எல்.வி.-9 ராக் கெட் ஏவும் திட்டக்குழு இயக்குனர் டாக்டர் தோஷி நிரு பர்களிடம் கூறுகையில், "இந்த சாதனை மூலம் எங் களுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து சந்திரனுக்கு விண் கலத்தை அனுப்பும் பணியையும் வெற்றிகரமாக செய்வோம்'' என்றார்.
9.30 மணிக்கு பூமத்திய ரேகையை பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட் அடைந்தது. 14-வது நிமிடத்துக்குப் பிறகு ஒவ்வொரு செயற் கைக் கோள்களாக ராக்கெட் டில் இருந்து தனியாக பிரிந்தன. சுமார் 20 நிமி டங்களில் 10 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக அவற்றுக்குரிய சுற்றுப் பாதை களில் விடப்பட்டன.
முதலில் ஜப்பானின் கிïட் செயற்கைக் கோளும் கடைசியில் ஜெர்மனியின் நீபான் செயற்கைக் கோளும் பறந்தன.
பூமியில் இருந்து 635 கி.மீ. உயரத்தில் விண்ணில் 10 செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டன. இன் னும் சில மணி நேரங்களில் 10 செயற்கைக் கோள்களும் தங்கள் பணியை செய்ய தொடங்கி விடும்.
உலக விண்வெளி ஆய்வு வரலாற்றில் 10 செயற் கைக் கோள்களுடன் ராக் கெட் ஏவப்பட்டது மிகப் பெரும் சாதனையாக கருதப் படுகிறது. இதற்காக இந்திய விஞ்ஞானிகளை உலகின் பல்வேறு நாட்டு விஞ்ஞானி களும் பாராட்டி உள்ளனர்.
இதற்கு முன்பு ரஷியா கடந்த ஆண்டு ஒரே ராக்கெட்டில் 8 செயற்கைக் கோள்களை ஏவியதுதான் உலக சாதனையாக இருந்தது.
10 செயற்கைக் கோள்களில் இந்தியாவின் கார்ட்டோ சாட் 2ஏ மற்றும் ஐ.எம்.எஸ். என்ற 2 செயற்கைக் கோள்களும் அடங்கும். இதில் கார்ட்டோ சாட் செயற்கைக் கோள் 690 கிலோ எடை கொண்டது. இது இந்தியாவின் இயற்கை வளங்களை அடையாளம் காணவும், கட்டுமான பணி களை மேம்படுத்தவும் உத வும், இந்த செயற்கைக் கோளில் பூமியை படம் பிடிக்கும் அதிநவீன காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
ஐ.எம்.எஸ். செயற்கை கோள் எதிர்கால ராக்கெட் ஏவும் தொழில் நுட்பத்துக்கு ஒரு பிளாட்பாரமாக இருக் கும். இது 83 கிலோ எடை கொண்டது.
மற்ற 8 செயற்கை கோள் களில் கனடா, ஜப்பான் 3, ஜெர்மனி நாடுகள் தலா 2 செயற்கைக் கோள்களையும், டென்மார்க், ஆலந்து நாடு கள்தலா 1 செயற்கைக் கோள்களையும் அனுப்பி உள்ளன.
இந்த 8 செயற்கைக் கோள் களும் `நானோ' வகை சிறிய செயற்கைக் கோள்களாகும்.