டெல்லியில் நேற்று இடம்பெற்ற மேல்சபைக் கூட்டத்தின் போது இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி ராஜா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய மீனவர்களின் நலனைக்கருத்திற்கொண்டு கச்சத்தீவு உடன்படிக்கை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என டி ராஜா தெரிவித்துள்ளார்.
1974ம் ஆண்டு இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.
எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கம் மீண்டும் கச்சத்தீவை பொறுப்பேற்க வேண்டும் அல்லது இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதன் ஷரத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் என டி ராஜா கோரிக்கை விடுத்தார்.