கோடை விடுமுறையை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.நாளாந்தம் ஒரு இலட்சத்துக்கு ம் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இரண்டு லட்டுக்கள் வீதம் வழங்குவது வழக்கம்.தினமும் ஒரு லட்சம் பேர் வருவதனால்,இரண்டு இலட்சம் லட்டு தேவைப்படுகின்றது.
ஆனால் கோவில் சமையல் கூடத்தில் “அன்றாடம் 1.60 லட்சம் லட்டுக்கள் தான் தயாரிக்கமுடிகின்றது இதனால் லட்டுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் தகவல் தருகையில் திருப்பதி கோவில் சமையல் கூடம் சிறிதாக இருப்பதால் தற்பொழுது 1.60 லட்சம் லட்டுக்கள் மட்டுமே தயாரிக்க முடிடிகின்றது,ஆனாலும் கூடுதலாக 20 ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கிறோம். சாதாரண பக்தர்களுக்கு லட்டு வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. வி.ஐ.பி களுக்கு லட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்