முதல்-அமைச்சர் கருணாநிதியின் கேள்வி- பதில் வருமாறு:-
கேள்வி:- நமது இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய தும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவக் கூடி யதுமான தொழில் திட்டங்கள் ஏராளமாக வர வேண்டு மென்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அதற்காகத் தானேதமிழக அரசும் இடை விடாமல் முயன்று கொண்டிருக்கிறது. சென் னையிலே இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களா என்றும், டாட்டாவையும் கிஷோர் களையும், குஹாக்களையும் தொழிற்சாலை தொடங்க அனுமதிப்பதா என்றும் கேள்வி கேட்டுக் கொண்டே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டு மென்று கூறுவது எப்படி பொருத்தமாகும்ப தொழிற்சாலைகளைத் தொடங்கினால்தான் தமி ழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தான் அந்த முயற்சி யிலே தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
கேள்வி:- தொழிற்சாÛ லகளை மிக மிகப்பின்தங்கிய மாவட்டங் களிலே தொடங்க வேண்டுமென்று டாக்டர் கூறுவதைப் பற்றி?
பதில்:- இது தான் நம் முடைய எண்ணமும் ஆகும். அதனால் தான் ஏற்கனவே ஆட் சிக்கு வந்த போதே, நீதிய ரசர் ரெத்தினவேல் பாண்டியன் தலைமையில் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென் பதற்காக குழு ஒன்றையே அமைத்தோம். பின் தங்கிய பகுதியான ஓசூரில் சிப்காட் வளாகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினோம். மிக மிக பின்தங்கிய பகுதிகளிலே தொழிற் சாலைகளைத் தொடங்க வேண்டுமென்பது நம்முடைய விருப்பம். அதைத் தான் தொழில் தொடங்க முன் வருபவர்களிடம் எல்லாம் சொல்கிறோம். நாங்குனேரியில் சிறப்பு தொழில் வளாகம் முரசொலி மாறன் முயற்சித்து தொடங் கப்பட்டது பின் தங்கிய பகுதி என்பதால் தானே! ஆனால் ஆயிரம் கோடி ரூபாய், இரண்டாயிரம் கோடி ரூபாய் என்று முத லீடு செய்ய முன் வரு பவர் களும் ஒத்துக் கொள்ள வேண்டுமல்லவா?
சென்னைக்கு அருகே தொழிற்சாலை தொடங்க அனுமதிக்கவில்லை என் றால், வருகிறவர்களும் ஆந் திராவிற்குப் போகிறோம், கர் நாடகத்திற்குப் போகிறோம் என்று போய் விடுவார்கள். அந்த மாநிலங்கள் எல்லாம் மேலும் பல சலுகைகளை கொடுத்து இவர்களுக்கு வரவேற்பளிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஏன்; டாட்டா கம்பெனி டைட்டானியம் தொழிற்சாலையைத் தொடங்க தூத்துக்குடி மாவட் டத்தைத் தேர்ந் தெடுத்த போது, இதே டாக்டர் ராம தாஸ் அவர்கள் அவசர அவசரமாக அங்கே சென்று ஒரு சென்ட் நிலத்தைக் கூட கொடுக்க விட மாட்டேன் என்று போராட்டம் நடத்த வில்லையாப அப்போது அது பின் தங்கிய மாவட்டம் என்பது நினைவில்லையாப இவர்கள் நடத்திய அந்தப் போராட்டத்தால் அந்தத் தொழிற்சாலை இன்னமும் வரவில்லையே.
அதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கில் பெறவிருந்த வேலை வாய்ப்பு போய் விட்டதேப அதையெல்லாம் அந்த இளைஞர்கள் நினைக்காமலா இருப்பார்கள்? தொழில் தொடங்க முன் வந்தது யார்ப அதைத் தடுத்தது யார்? அதனால் ஏற்பட்ட விளைவு என்ன? என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறி வார்கள். பின் தங்கிய பகுதி யான ஓசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்கப்படும் என்று அறிவித்த போது, அதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் போராட்டம் அறிவிக்க வில் லையா?
அரசின் சார்பில் குறிப் பாக மிக மிக பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற் சாலைகளைத் தொடங்கத் தான் முயற்சிக்கிறோம். ஒரு சில முதலீட்டாளர்கள் அதை ஏற்று வேறு மாவட் டங்களிலும் தொழில் தொடங்க தற்போது முன் வருகிறார்கள். அதனால் தான் தகவல் தொழில் நுட்ப மையங்களை மதுரையிலும், கோவையிலும், திருச்சியி லும், சேலத்திலும், நெல்லை யிலும், வேலூரிலும் தொடங்கு வதாக திட்டமிட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.
நேற்றைய தினம் கூட தலைமைச் செயலகத்தில் அந்த மாவட்டங்களில் தொழில் தொடங்க முன் வந்தவர்களுக்கு நில ஒதுக் கீட்டிற்கான ஆணை யினை நானே வழங்கினேன்.
கேள்வி :- 1999இல் ஐதரா பாத்தில் கிரீன்பீல்டு விமான தளம் கட்டப்பட்டது. அதே போன்று பெங்களூரில் இன்னும் இரண்டு மாதங் களில் விமான தளம் கட்டி முடிக்கப்பட உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இது போன்று இன்னும் கட்டப் படவில்லை. இதற்கு யார் காரணம்ப சென்னை யில் பசுமை வயல் வானூர்தி நிலையம் வேண்டாம் என்று நானா சொன்னேன்ப நானா முட்டுக்கட்டை போட்டேன்ப பிறகு ஏன் இத்தனை ஆண்டு கள் தாமதம்ப என்று டாக்டர் ராமதாஸ் கேட்கிறாரே?
பதில்:- டாக்டர் ராம தாஸ் அவர்களுக்கே நன்றா கத் தெரியும். சென்னை யில் விமான நிலைய விரிவாக்கத் திற்கான நடவடிக்கைகள் தொடங்கிய போதே, அதற் கான இடத்தை எடுக்க முயற்சித்த நிலையில், இதே டாக்டர் ராமதாஸ் அவர்கள் உட்பட விரிவாக்கம் தேவை என்றாலும், அதற் காக இடத்தை எடுக்கக் கூடாது என்று சொல்ல வில் லையா?
19-1-2007 அன்று பா.ம.க. சார்பில் விடப்பட்ட செய்தி வெளியீட்டில் "மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவது என்ற திட்டத்தை நிறைவேற்றினால் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அனகாபுத்தூர், பொழிச்சலூர், பம்மல், கவுல் பசார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 583 எக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் நிலைமை ஏற்படும். அதனால் பல ஆயிரக்கணக்கான குடி யிருப்புகளை அகற்ற வேண்டிய ஆபத்து உள் ளது.'' என்றெல்லாம் தெரி வித்ததோடு, டாக்டர் ராமதாஸ் அதே நாளில் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கே வாழும் மக்களிடையே பேசி அதுவும் ஏடுகளிலே வெளி வரவில்லையா?
10-3-2007 அன்று டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கை என்ன? "தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு ஈடாக சென்னைப் பெரு நகரிலும் வானூர்தி போக்கு வரத்து வசதி பெருக வேண் டும் என்பதிலும், அத னால் பொருளாதார வளம் பெருகும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. பொருளா தாரம் வளம் பெற வேண் டும் என்பதற்காகப் பல ஆண்டுக் காலமாக வீடு களைக் கட்டி, அங்கு வசித்து வரும் மக்களை கட்டாயமாக வெளியேற்றி அதன் மூலம் அவர்களுடைய பொருளாதாரத்தை சீர் குலைக்க வேண்டுமாப இது மனித நேய நடவடிக்கையாப என்பதை அரசு சிந்தித்துப்பார்க்க வேண்டும். குடிசைகளையும், ஓட்டு வீடு களையும் அகற்றி வானூர்தி நிலையத்தை விரிவாக்கம் செய்யப் போகிறோம், அப்படிச் செய்தால் சென்னை, சிங்கார சென்னையாக மாறும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?'' என்று கேட்டிருக்கிறார்.
மீண்டும் 19-4-2007 அன்று டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர் களிடம் பேசும்போது, சென்னை விமான நிலைய விரிவாக்கத் திற்காக மணப்பாக்கம், காட்டுப்பாக்கத்தில் 800 ஏக்கர் கையகப்படுத்த உள் ளதாக தெரிகிறது. விரி வாக்கம் கூடாது, புதிய விமான நிலையத்தைத் தான் அமைக்க வேண்டுமென்று கூறினார்.
அதற்குப் பிறகு தானே அரசின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டு, மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள் ளது. அப்போது சென்னை விமான நிலைய விரி வாக்கம் பற்றியும் மத்திய அமைச்சருடன் விரிவாக கலந்து பேசி ஜுன் திங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
கேள்வி :- சென்னை அருகே எண்ணூரில் கப்பல் கட்டும் தளமும், துறைமுகமும் அமைப்பதற்கு எல் அண்ட் டி நிறுவனத்திற்கு இசைவு வழங்கப்பட்டு பெரு மளவிலான நிலமும் ஒதுக் கப்பட்டிருக்கிறது. இதை நான் எதிர்க்கவில்லை என்று டாக்டர் ராமதாஸ் சொல்லி யிருக்கிறாரே?
பதில் :- அது தான் விந் தையாக உள்ளது. இதுவும் தமிழ்நாட்டிலே பிறந்தவர் தொடங்கும் தொழிற்சாலை அல்ல. இதற்கும் நிலம் எடுக்கப் படத்தான் உள் ளது. ஆனால் இதுபோன்ற ஒருசிலவற்றை மட்டும் ஆத ரிக்கும் டாக்டர் வேறு சிலர் ஆரம்பிக்கின்ற தொழிற் சாலைகளை மட்டும் எதிர்க்கிறார். ஆனால் தமிழக அரசைப் பொறுத்த வரையில் எந்த வித மான பாகுபாடும் இல் லா மல், தமிழகத்திலே தொழிற் சாலைகளைத் தொடங்கி, தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தொழில் தொடங்க அனு மதி வழங்கி வருகிறது. டாட்டாவையும் வேண்டா மென்று சொல்ல வில்லை. எல் அண்ட் டி தொழிற்சாலையையும் வேண்டாமென்று சொல்ல வில்லை. தொழிற் சாலையைத் தொடங்குவது யார் என்று பார்க்காமல், என்ன தொழிற்சாலை, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தான் பார்க்கிறோம்.
கேள்வி :- தொழில் வளர்ச்சி என்ற பெயரால் மனை வணிகத்திற்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள் கூடாது என்கிறாரே டாக்டர்?
பதில்:- தி.மு.கழக அரசு மனை வணிகத்திற்கு ஊக்க மளிக்கும் எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதுப ஒரு பெரிய தொழிற்சாலை வந்தால், அங்கே பணியாற்று பவர்களுக்கான வசதிகள், குடியிருப்புகள் அந்தப் பகுதியிலே வரத் தானே செய்யும். 24 மணி நேரமும் தொழிற் சாலைகளிலேயே இருந்து கொண்டு வேலை பார்க்க இயலாதல்லவாப டாக்டர் கூற்றுக்கு ஆதார மாக பத்திரிகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "சென்னை பரங்கிமலை அருகே, மணப் பாக்கத்தில் டி.எல்.எப். நிறுவனம் உரு வாக்கிய தகவல் தொழில் நுட்பப் பூங்காவின் வெளிப் புறத் தோற்றம். ஐ.பி.எம். உள்ளிட்ட பல நிறுவனங் களுக்குக் கட்டடங்களை ஏற்கனவே வாடகைக்கு விட்டிருக்கிறது இந்த நிறுவனம்'' என்று அடிக் குறிப்பு எழுதப்பட்டுள் ளது. இந்த அடிக்குறிப்பி லேயே நான் கூறுவதற்கும் விடை உள்ளது. அதாவது "ஐ.பி.எம். உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு'' என்பதி லிருந்தே - இது போன்ற பல தொழில் நிறுவனங்களுக்கு அடிப்படை வசதிகளோடு டி.எல்.எப். நிறுவனம் இடங் களைக் கட்டிக் கொடுக் கின்றது.
மிகப்பெரிய நிறுவ னங் கள் தொழில் தொடங்குவ தென்றால் தாங்க ளாகவே கட்டிக் கொள்ள லாம். நடுத்தரமான தொழிற் சாலைகள் தொடங்கும் போது, அவர்களே திட்ட மிட்டு கட்டிடங்களைக் கட்டு வதற்கு தாமதமாகலாம் அல்லது தயாராக இல்லாமல் இருக்கலாம். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டி.எல்.எப். நிறுவனம் அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டிடங்களைக் கட்டித் தருகிறது. இதிலே என்ன தவறுப அதுபோலவே இத்த கைய பல்வேறு நிறுவனங் களிலே பணியாற்றுபவர்கள் வசிப்பதற்கான வீடுகளை யும் அந்தத் தொழிற் சாலை களுக்கு அருகிலேயே அமைத் துக் கொடுக்கும் பணி யிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கேள்வி:- தொழில் கொள் கையில் அறிவித்ததை நிறைவேற்றுங்கள் என்று தான் சொல்கிறோம் என்று செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் கூறியிருக் கிறாரே?
பதில்:- தொழில் கொள்கை தி.மு.கழக அரசு கொண்டு வந்தது தானேப அப்படியிருக்க அதை நிறை வேற்ற மாட்டோம் என்றா சொல் வோம். தொழிற் கொள்கையில் சொல்லிய வற்றைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். தி.மு. கழகத்தைப் பொறுத்த வரை செய்வதைத் தான் சொல் வோம், சொன்னதைத் தான் செய்வோம்.
கேள்வி:- "சிறப்புப் பொருளாதார மண்டலத் திற்கு தரமணியில் பல ஆயிரம் சதுர அடி நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றரை லட்சம் சதுர அடி தரை தளம், கட்டிடம் ஆகியவை தரமணியில் உள்ளது. அவற்றை சிறப்பு பொருளாதார மண்டலத் திற்குக் கொடுக்காமல் பல ஆயிரம் சதுரடி நிலம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்றெல்லாம் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் சொல்லியிருப்பது பற்றி?
பதில்:- 1-5-2008 அன்று நான் எழுதிய பதி லில் தரமணியில் சிறப்புப் பொருளாதார மண்டலத் திற்கு ஒவ்வொன் றுக்கும் சுமார் 25 ஏக்கர் அளவிற்கு நிலம் கொடுக் கப்பட்டிருப் பதாகவும், அங்கே 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் வரவுள்ளன என்றும் விளக்க மாகச் சொல்லி யிருக்கிறேன். பல ஆயிரம் சதுர அடி நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் எந்தத் தகவலை அடிப்ப டையாகக் கொண்டு சொல் கிறார் என்று தெரிய வில்லை.
கேள்வி :- அரசு நிலங் களைக் கொடுக்கும்போது, அமைச்சரவை மட்டும் கூடி முடிவெடுக்கக் கூடாது என்றும், சட்டமன்றத் தில் விவாதம் நடத்த வேண்டு மென்றும் பா.ம.க. தலைவர் சொல்லியிருப்பதைப் பற்றி?
பதில்:-நல்லயோசனை, 2011ஆம் ஆண்டு தமிழ கத்திலே பா.ம.க. ஆட்சியில் இது நிறைவேற்றப்பட்டு, இந்தப் பெருமை டாக்டர் அவர்களுக்கே சேரட்டும். அரசு நிலங்களைத் தான் பட்டாக்கள் என்ற பெயரால் ஏழையெளிய விவசாயிகளுக்கும், நில மற்றவர்களுக்கும் கூட வழங்குகிறோம். அப்படிப் பட்ட ஆயிரக்கணக்கான பட்டாக்களைப் பற்றி யும், அதைப் பெறுகின்ற ஒவ்வொரு ஏழைகளைப் பற்றியும் சட்ட மன்றத்தில் விவாதித்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
கேள்வி :- தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள தக வல் தொழில் நுட்ப நிறுவ னங்களில் எத்தனை பேருக்கு என்னென்ன வேலை வழங்கப் பட்டுள்ளது என்பது குறித்து நடப்பு சட்டமன்றத் திலேயே வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் கட்டளை யிட்டிருக்கிறாரே?
பதில் :- தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களே தொடங்கப்பட வில்லை என்றும் அதிலே யாருக் கும் வேலை வாய்ப்பு வழங் கப்படவில்லை என்றும் அவர் நினைக்கிறாரா என்னப சென்னை மாந கரில் பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங் களின் சார்பில் பேருந்துகள், தங்கள் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு காலை யிலும் மாலையிலும் சாலைகளில் செல்வதைப் பார்த்தாலே, வேலை வாய்ப்பு கிடைத்ததா இல் லையா என்பதை தெரிந்து கொள்ளலாமே?
ஒவ்வொரு தொழிற் சாலைக்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகும்போதும், அவர்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பார்கள், அப்படி பணிக்கு எடுக்கப்படுகிறவர்கள் தொழிற்சாலைக்கு அரு கிலே வாழுகின்ற தமிழர் களாக இருக்க வேண் டும் என்றெல்லாம் நிபந் தனை விதித்து தான் அளிக்கப்படுகின்றன. அந்தத் தொழிற்சாலைகள் கூறுகின்ற எண்ணிக்கையில் 100 பேர் குறைவாக இருக் கலாம், அல்லது 100 பேர் அதிகமாக இருக்கலாம். தொழிற்சாலை வளர வளர அந்த எண்ணிக்கை கூடலாம். அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்வதுப நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க் கையை நடத்த வேண்டுமே தவிர, எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்கா மல் போய் விடும்.
இது மாத்திரமல்ல, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் இந்த இரண்டாண்டு காலத்தில் தான் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, கட்டிடங்கள் கட்டும் பணி யிலும், இயந்திரங்களை நிறு வும் பணியிலும் ஈடுபட்டு தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் நிலையிலே உள்ளார்கள். முழு அள வில் நிறுவனங்களைத் தொடங்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.
இதுவரை 13 நிறுவனங்களு டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அவற்றில் ஆறு நிறுவனங் கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன. ஆறு நிறுவனங்களுக்கான கட்டி டங்கள் கட்டும் பணி நடை பெற்று வருகிறது.
மோட்டரோலோ நிறுவ னத்தில் நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 1000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று ஒப்பந்த நேரத்தில் தெரிவித்தார்கள். இதன்படி தற்போது நேர டியாக 600 பேரும், மறை முகமாக 1000 பேரும் பணி வாய்ப்பு பெற்று பணி யாற்றுகிறார்கள்.
டெல் கம்ப்ïட்டர்ஸ் நிறுவனத்தில் நேரடியாக 200பேருக்கும், மறைமுகமாக 600 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று கூறப் பட்டது. தற்போது நேரடியாக 200 பேரும் மறைமுகமாக 600 பேரும் பணி வாய்ப்பு பெற்று விட்டார்கள்.
சாம்சங் இந்தியா எலெக்ட் ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் போது தெரிவித்தவாறு நேரடியாக 300 பேரும், மறைமுகமாக 150 பேரும் பணி வாய்ப்பு பெற்றுவிட்டனர்.
கேபாரோ வாகன உற்பத்தி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நேரடி யாக 350 பேரும், மறைமுகமாக 350 பேரும் ஒப்பந்ததில் தெரிவித்தவாறு வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
சான்மினா - எஸ்.சி.ஐ. கார்பரேஷன் ஆப் யு.எஸ்.ஏ. நிறுவனத்தில் நேரடியாக 475 பேரும், மறைமுகமாக 150 பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இரண்டு கட்டங் களிலும் சேர்த்து நேரடியாக 11,324 பேரும், மறைமுகமாக 22,000 பேரும் ஒப்பந்தத்தில் தெரிவித்தவாறே வேலை வாய்ப்பு பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
தொழில் துறையைப் பொறுத்து மாத்திரம் நேரடி யாகவும், மறைமுக மாகவும் 37,499 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரை தி.மு.கழக ஆட்சி மலர்ந்த பிறகு மாத்திரம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 610 பேர்.ஒரு உதாரணம் கூற விரும் புகிறேன். நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தனது பணியாளர்களை அழைத்து வர மட்டும் 80 பேருந்துகள் இயங்குகின்றன என்பதிலிருந்தே வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.