News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

பிரியங்கா-நளினி சந்திப்பு: பொய் தகவல் கொடுத்த பெண் சூப்பிரண்டு `சஸ்பெண்டு'ஆவாரா?

03-05-2008
Article by:
Pradeep

ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்து பேசினார் என்ற தக வல் வெளியானது.
 
இந்த சந்திப்பை பிரியங்கா வும், நளினியும் உறுதி செய்தனர்.
 
இது தொடர்பாக பிரியங்கா கூறும்போது, முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. வன்முறையால் எனது தந்தையை பறிகொடுத்த எனக்கு இச்சந்திப்பு மிகவும் ஆறுதலாக இருந்தது. வன்முறை உணர்வுகள் என்னை தொற்றிக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் நான் அனு மதிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
 
பிரியங்கா என்னை சந்தித்ததன் மூலம் எனது பாவங்கள் கழுவப்பட்டு விட்டது. நான் வாழ்நாள் முழுவதும் அவருக்காக கடமைப்பட்டுள்ளேன் என்று நளினி கூறினார்.
 
பிரியங்கா-நளினியின் இந்த உணர்ச்சிப் பூர்வமான சந்திப்புக்கு பின்னர் நளினி விரைவில் விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் ஏற்பட்டுள்ளது. 18 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக சிறையில் வாடும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினியும் ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார்.
 
வேலூர் சிறையில் பிரியங்கா-நளினி சந்திப்பு நடந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இச்சந்திப்பு தொடர்பாக சிறை துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளி யிடவில்லை.
 
இந்நிலையில் பிரியங்கா- நளினி சந்திப்பு விவகாரம் வேலூர் பெண்கள் சிறை சூப்பிரண்டு ராஜசவுந் தரிக்கு எதிராக தற்போது பூதாகரமாக திரும்பியுள்ளது.
 
இது தொடர்பாக நளினி யின் வக்கீல் துரைசாமி யின் மகன் வக்கீல் ராஜ் குமார், மாநில தகவல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
 
பிரியங்கா-நளினி சந் திப்பு மார்ச் மாதம் 19-ந் தேதி நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மையாப அப்படியனால் எந்தவிதிகளின்படி இச்சந் திப்பு நடைபெற்றது. அப் போது யார்-யாரெல்லாம் உடனிருந்தார்கள். பிரியங்கா வும்-நளினியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை தெரிவிக்க வேண் டும் என்று வேலூர் சிறை நிர்வாகத்துக்கு மனு செய்யப் பட்டது.
 
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்கீழ் ஏப்ரல் 8-ந்தேதி இந்த மனு கொடுக் கப்பட்டது. ஏப்ரல் 16-ந்தேதி சிறை அதிகாரியும், பொது தகவல் அலுவலருமான ராஜசவுந்தரி இம்மனுவை பெற்றுக் கொண்டு பதில் அனுப்பினார். அதில் ஆயுள் கைதியான நளினியை மார்ச் 13 மற்றும் 19 ஆகிய தேதிகளில் யாரும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
 
ஆனால் நளினியை மார்ச் 19-ந்தேதி சந்தித்து பேசினேன் என்று பிரியங்கா கூறியுள்ளார். இதன் மூலம் சிறை சூப்பிரண்டு ராஜசவுந்தரி தவறான தகவலை கொடுத்துள்ளார். எனவே தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு 18 (2)-ன் கீழ் விசாரணை நடத்தி தவறான தகவலை அளித்த சிறை சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு மீது மாநில தகவல் ஆணைய அதிகாரி களும், சிறை துறை அதிகாரி களும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உண்மையான தகவல்களைத்தான் சொல்ல வேண்டும். பொய்யான தகவல்களை தெரிவிக்கக் கூடாது. ஆனால் சிறை சூப்பிரண்டு ராஜசுவுந்தரி பொய்யான தகவல்களை கூறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இக்குற்றச்சாட்டு நிரூபிக் கப்பட்டால் ராஜசவுந்தரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சஸ்பெண்டு செய்யப் படுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
 
இது தொடர்பாக சிறை துறை கூடுதல் டி.ஜி.பி. சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, "வேலூர் சிறை சூப்பிரண்டு ராஜசவுந்தரிக்கு எதிரான மனு இன்னும் வரவில்லை. அது கிடைத்த பின்னர்தான் இதற்கு பதில் கூற முடியும்'' என்றார்.
 
இப்பிரச்சினை தொடர் பாக நளினியின் வக்கீல் துரைசாமி கூறியதாவது:-
 
நளினி - பிரியங்கா சந்திப்பு தொடர்பாக சிறை அதிகாரி பொய்யான தகவலை கூறியுள்ளார். உரிய முறையில் விசா ரணை நடத்தி அது நிரூ பிக்கப்பட்டால் சிறை அதிகாரி ராஜசவுந்தரியின் பதவி உயர்வு ரத்து செய் யப்படலாம். பணி நீக்கம் செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது.
 
நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி தெரிந்து கொள்வதற்காகவே தகவல் அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே இச்சட் டப்படி பொய்யான தகவல் களை கூறுவது சட்டத்தை மீறுவது போன்றதாகும்.
 
இதற்கு விளக்கம் அளிக்குமாறு தகவல் ஆணையம் சார்பில் சிறை அதிகாரி ராஜசவுந்தரிக்கு நோட்டீசு அனுப்பப்படும். இதற்கு அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தகவல் ஆணையத்தில் அவர் ஆஜராகி சாட்சியமும் அளிக்க வேண்டும்.
 
இவ்வாறு வக்கீல் துரை சாமி கூறினார்.
 
பிரியங்கா-நளினி சந் திப்பு விவகாரத்தில் சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பது சிறை துறை அதிகாரி களிடையே பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

 Other Articles
•  22 May 2008 17:47:00 பாரிய நட்சத்திர வெடிப்பின் ஆரம்ப தருணங்கள் பதிவு நியூஜெர்ஸி ஆராய்ச்சியாளர்கள் சாதனை
•  22 May 2008 17:41:00 மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டா? வார்ன் மறுப்பு
•  22 May 2008 17:30:00 76 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் ஜப்பானியர்.
•  22 May 2008 17:18:00 காணாமல் போனோருக்கு தற்காலிக இறப்பு சான்றிதழ்
•  22 May 2008 17:09:00 ஜே.வி.பி.யினர் அரசியல் ஞான சூன்யங்கள் - நீதியமைச்சர்
•  22 May 2008 17:01:00 மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்தமை விடுதலை புலிகளுக்கு கிடைத்த வெற்றியல்ல
•  22 May 2008 16:52:00 பேரவை அங்கத்துவத்தை இலங்கை இழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு - திஸ்ஸ
•  22 May 2008 16:38:00 பல முக்கியஸ்தர்களை இழந்துள்ள போதும் புலிகள் அமைப்பின் போக்கில் மாற்றங்கள் எதுவும் இல்லை
•  22 May 2008 16:27:00 ஈபிடிபி முக்கிய உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  22 May 2008 16:21:00 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் - அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா
•  22 May 2008 16:05:00 தளபதி பால்ராஜ் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும் - கேணல் தீபன்
•  22 May 2008 15:59:00 மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியனவே ஒருநாட்டின் சிறந்த ஆட்சி - ரணில்
•  22 May 2008 15:46:00 கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு ஜூன் 4 வரை ஒத்திவைப்பு
•  22 May 2008 15:37:00 அனைத்துலக தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இருவர் பிள்ளையான் குழுவால் கடத்தல்
•  22 May 2008 15:31:00 பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் தொலைபேசி ஊடாக பேச்சு
•  22 May 2008 15:04:00 பிரிகேடியர் பால்ராஜ் எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக என்றும் இருப்பான் - தேசியத் தலைவர்
•  22 May 2008 13:56:00 வன்முறையைக் கைவிட பிள்ளையானிடம் வலியுறுத்தல்
•  22 May 2008 13:55:00 ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதே
•  22 May 2008 13:52:00 தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உடன்பட்டுகொள்ளகூடாது
•  22 May 2008 13:48:00 திருகோணமலை மாவட்டத்தில் ஆட்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions