தென்னிந்தியாவிலே, ஆந்திர மாநிலம் குண்டூரில் இந்தியாவின் மிகப் பெரிய மிளகாய்ச் சந்தைகளில் ஒன்றில் பெரிய அளவில் தீ பரவியதில் அந்தச் சந்தை பெரும் சேதத்துக்குள்ளாகியிருக்கிறது.
பெருமளவிலான மிளகாய் தீயில் கருகியதால், அவ்விடத்தைச் சுற்றியும் காரமான நெடியுடன் கண் எரிச்சல் தருகின்ற புகை பரவியிருப்பது, தீயைக் கட்டுப்படுத்த முயலும் தீயணைப்புப் படையினருக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஆட்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தீ எவ்வாறு பரவியது என்ற விபரம் இதுவரை தெளிவாகவில்லை.