பட்ஜெட் கூட்டம் முடிவடைந்ததும் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையிலிருந்து ஐந்து பேருக்கு கல்தா கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக ஐந்து புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
.
அத்துடன் மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறை உள்ளிட்ட சில முக்கிய பொறுப்புகளையும் வழங்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடை கிறது. இதனிடையே கருணாநிதி தலைமையில் திமுக அரசு பதவி யேற்று வரும் 13ந் தேதி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதனையடுத்து தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங் களை செய்ய முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. என்.கே.கே.பி.ராஜா, டி.பி.எம். மொய்தீன் கான், பெரிய கருப்பன் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் அமைச்சரவை யிலிருந்து நீக்கப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரான கோ.சி. மணி யின் உடல்நிலை கருதி அவருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பெண் அமைச்சர் ஒருவரும் தனது பதவியை இழக்கக் கூடுமென்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்களுக்கு பதிலாக ஐந்து புதுமுகங்கள் அமைச்சரவை யில் இடம் பெறக் கூடுமென்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த தகவல் சட்டமன்ற திமுக உறுப்பினர் மத்தியில் கசிந்து அவர்கள் இப்போதே அமைச்சரவை யில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு களை பெறுவதற்கு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக முக்கிய ஆட்சி மையங் களான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரை அணுகி தங்க ளுக்கு வாய்ப்பு கிடைக்க செய்யும்படி கேட்டு வருகிறார்கள்.
அழகிரியின் ஆதரவாளர்களான ராஜகண்ணப்பன், கவுஸ் பாஷா, மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்ற கருப்பசாமி பாண்டியன் ஆகி யோருக்கு அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாச மாக இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் மாற்றத்துடன் இலாகாக்கள் மாறுதலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை காண இருக்கும் முதலமைச்சர் தமது சுமை களை குறைத்துக் கொண்டு மொழி, சமூக பணியில் அதிகம் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதாக கூறப்படு கிறது. அதற்கு வசதியாக குறைந்த அளவு இலாகாவை அவர் வைத்துக் கொண்டு மீதி இலாகாக் களை மற்ற அமைச்சர் களுக்கு பகிர்ந் தளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலி னுக்கு மேலும் முக்கியத் துவம் அளிக்கும் வகையில் காவல் துறை உள்ளிட்ட முக்கிய பொறுப் புகள் அவருக்கு வழங்கப் படும் என்று கூறப் படுகிறது. அப்படி காவல் துறை வழங்கப்படுமானால் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்துறை இலாகாவை வகிக்கும் முதல்வர் அல்லாத அமைச்சர் பெருமையை அவர் பெறுவார்.