இந்திய எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 60 இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை சென்னையில் உள்ள இலங்கைக்கான துணைத் தூதுவர் பி. எம். அம்ஸõவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும் வரை இவர்கள் நாடு திரும்புவதில் காலதாமதம் ஏற்படலாம் என மேலும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 29 ஆம் திகதியன்று இந்தியக் கடலோர காவற்படையினரால் எல்லை தாண்டி பிரவேசித்ததாக 60 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணகளையடுத்தே மேற்படி மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் இரு தடவைகள் பிடிபட்ட 60 மீனவர்கள் மண்டபம் காவற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்