இந்தியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்யும் வீதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அந்த விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
விதர்பா பிராந்தியத்தில், 450க்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அங்கு நிவாரணத்திட்டங்களுக்காக இந்திய அரசும், அதிகாரிகளும் 100 கோடிக்கும் அதிகமான டாலர்களை செலவிட்டனர்.
ஆனால், அடுத்த வருடம் அங்கு 1400 க்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டதாக, அரசாங்க அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
போதுமான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாத காரணத்தினால், அந்த நிவாரண முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது