பத்மஸ்ரீ விருது பெற்று திரும்பிய தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பத்மஸ்ரீ விருது
பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த சேவை செய்ததற்காக தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த விழாவில் வழங்கினார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 10.10 மணி அளவில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அகில இந்திய பாரத ரத்னா பெருந்தலைவர் காமராஜர் சேவா சங்கத்தின் வரவேற்பு கூட்ட ஆலோசனைக்குழு சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்திய நாடார் கூட்டமைப்பு துணைத் தலைவர் மயிலை சி.பெரியசாமி நாடார், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொதுச் செயலாளரும், ஆலோசனைக் கூட்ட அமைப்பாளருமான ஆர்.டி.சிற்றம்பல பாண்டியன், நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் டி.ராஜகுமார், சபேஸ் ஆதித்தன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், சென்னை வாழ் நாடார் சங்க துணைத் தலைவர் கே.வி.பி.பூமிநாதன், புரட்சி பாரதம் அனகை அன்பரசன், சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்பட பலர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்
விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் அங்கு திரண்டு இருந்த பல்வேறு அமைப்பினரும், ஆண்களும், பெண்களும் பத்மஸ்ரீ சின்ன அய்யா வாழ்க என்று கோஷம் போட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குதிரை மீது வீரர்கள் அமர்ந்து முன்னே செல்ல, பாண்டு வாத்தியக் குழுவினர் திறந்த வாகனத்தில் இசை அமைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான கார், வேன்கள் ஊர்வலமாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனை அழைத்துச் சென்றனர். பரங்கிமலை ஜோதி தியேட்டர் முன்பு வரவேற்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
ஊர்வலம் அந்த மேடையை அடைந்ததும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த மேடைக்கு சென்றார். அங்கும் ஏராளமானவர்கள் திரண்டு மாலைகள், பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாடார் சங்கங்கள்
வரவேற்பு குழு அமைப்பாளர்கள் பி.சின்னமணி நாடார், ஆர்.டி.சிற்றம்பல பாண்டியன், என்.ஆர்.தனபாலன், டி.தங்கமுத்து, மயிலை சி.பெரியசாமி, கிருஷ்ண புரட்சியாளர், ஏ.பி.முனுசாமி நாடார், டி.ராஜகுமார், ஆலந்தூர் பி.கணேசன், எஸ்.வி.முத்துப்பாண்டி, எஸ்.சவுந்தர், எம்.இந்துநாதன், புரட்சி பாரதம் அனகை அன்பரசு ஆகியோர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு பொன்னாடைகள், சந்தன மாலைகள் அணிவித்து நினைவுக் கேடயம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில் மணலி நாடார் சங்க தலைவர் ஏ.காமாட்சி பாண்டியன், காமராஜர் சேவா சங்க அமைப்பாளர்கள் எஸ்.வி.ரூபன் இன்பராஜ், தனம் என்கிற ராமச்சந்திரன், ஆர்.ஜெயபாண்டியன், பி.தங்கமுத்து, சி.மகாலிங்கம், சென்னை வாழ் நாடார் சங்க துணைத் தலைவர் கரு.சின்னத்துரை நாடார், தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்க தலைவர் ஆர்.எஸ்.காயல் இளவரசு, நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க பொருளாளர் ஏ.ஏ.முருகேசன், போரூர் நாடார் சங்க தலைவர் வி.ஆனந்தராஜ், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சி.லட்சுமணன், நாடார் பேரவை பொருளாளர் டி.வாசன், மீஞ்சூர் நாடார் சங்க தலைவர் எம்.ஏ.திரவியம், பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் டி.துரைசந்திரசேகர், ஆர்.சேவியர், சைதை நாடார் சங்கம் பி.மணிராஜ்,
நாடார் பேரவை செயலாளர் புழல் ஏ.தர்மராஜ், ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் ஆர்.செல்வகுமார், தாம்பரம் நாடார் சங்கம் டி.பட்டுராஜன், காஞ்சீபுரம் நாடார் சங்க தலைவர் வெள்ளைச்சாமி நாடார், அமரேசன், திருநின்றவூர் நாடார் சங்க தலைவர் நாஞ்சில் டி.ஜெய், பாலாஜி நகர் குடியிருப்போர் நலசங்க தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், தென்னிந்திய சமையல் கலைஞர்கள் நல சங்க தலைவர் எம்.நடராஜன், பம்மல் என்.ஞானசேகர், ஏ.அருள்மணி, எஸ்.வி.எஸ்.லிங்கம், ஏ.சுந்தரபாண்டியன், ஆர்.முத்துமாரியப்பன், கீழ கடலோர நாடார் சங்கம் எம்.அன்பழகன், கே.சிவராமன், ராமாபுரம் நாடார் சங்க தலைவர் ஆர்.அமிர்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துக்குமார், சென்னை வாழ் செட்டிக்குளம் பண்ணைïர் வட்டார நாடார் சங்க தலைவர் ரியல் பி.எஸ்.ராஜ், செயலாளர் டி.பால்ராஜ், பட்டாபிராம் நாடார் ஐக்கிய சங்க தலைவர் ராஜாங்கம், செயலாளர்கள் எஸ்.ஆர்.கருப்பையா, எம்.அருமைநாதன், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம், புழல் நாடார் சங்க தலைவர் வடிவேல்சாமி, பொதுச் செயலாளர் தங்கவேலு, சென்னை வாழ் அழகாபுரி நாடார் உறவின் முறை செயலாளர் எம்.எஸ்.காமராஜ், டி.சன்னாசி நாடார், அம்பத்தூர் பி.சுயம்புலிங்கம், சூளைமேடு தனசேகர்,
நற்பணி மன்றத்தினர்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மண்டல தலைவர் எஸ்.வி.முத்துப்பாண்டியன், மத்திய சென்னை தலைவர் எஸ்.சவுந்தர், செயலாளர் எஸ்.அமுதா பாலகிருஷ்ணன், எம்.ஆர்.பாலசுப்பிரமணியம், தென்சென்னை மாவட்டம் எஸ்.பி.அம்பேத்கர் சேகர், சாலிகிராமம் எம்.தேவராஜ், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் யு.எஸ்.பி.முருகானந்தம், வடசென்னை வி.ரகுநாதன், திருவொற்றிïர் தலைவர் டி.முல்லைராஜா, அஸ்தினாபுரம் சி.ஆர்.மதுரைவீரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம்.ஜெயபால், நெற்குன்றம் சூசை மைக்கேல், திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் ரெட்ஹில்ஸ் ஜி.நாகராஜன், வியாசர்பாடி தலைவர் சி.நாகராஜன், நெற்குன்றம் கே.முத்துராமன், திருநின்றவூர் பி.சுயம்புலிங்கம், கானு நகர் பி.குருசாமி நாடார், எஸ்.பாஸ்கர், மலர் பாண்டியன், பூவை நற்பணி மன்ற தலைவர் பி.ஆறுமுகபாண்டியன், சேலம் மாநகர தலைவர் சுந்தரபாண்டியன், மாடம்பாக்கம் ஜி.ஜெயக்குமார், எஸ்.சந்துரு, டி.ஜார்ஜ் அந்தோணி,
விருகம்பாக்கம் மன்ற தலைவர் ஆர்.ராஜ்குமார், செயலாளர் ப.இசக்கிமுத்து, சாலிகிராமம் ஜே.எட்வின், கடப்பேரி மன்ற செயலாளரும், தி.மு.க. கவுன்சிலருமான வீரசிங், லெஸ்லி சேகர், வெங்கடசாமி, சாலிகிராமம் தலைவர் தேவராஜ், செயலாளர் ஜெயக்குமார், மடிப்பாக்கம் பொருளாளர் அப்துல்காதர், புறைïர் எஸ்.ரஹீம், எஸ்.எம்.இஸ்மாயில், எஸ்.டி.கொரியர் நவாஸ்கனி, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் தோப்பு மணி, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் டி.அய்யாசாமி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் எஸ்.அருணாசலம், மீஞ்சூர் வட்டார தலைவர் வெள்ளைச்சாமி, மணலி புதுநகர் தலைவர் டேவிட், செயலாளர் முகம்மது, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ்,
அம்பேத்கார் மக்கள் முன்னணி கழக தலைவர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, விடுதலை விரும்பிகள் கட்சி நிறுவன தலைவர் பெ.செங்கோடன், காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் டி.சிவபால், சமத்துவ மக்கள் கட்சி சரத் செல்வம், சைதை நிர்மல்ராஜ், அமர்தீன், மனோஜ்குமார், எஸ்.பி.பிரேம்ராஜ், அம்சராஜ், திவாகர், தமிழரசி, வேல்விழி, சுவேதா, லட்சுமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வரவேற்பு பதாகைகள்
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனை வரவேற்கும் விதமாக விமான நிலையத்திலிருந்து அண்ணாசாலை வரை வழி நெடுக வரவேற்பு பதாகைகளும், சுவரொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.