News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

23 புதிய தொழிற்பேட்டைகள்

07-05-2008
Article by:
Pradeep

கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழிற்கூடம் கட்டப் படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
.
சட்டமன்றத்தில் இன்று இத்துறைக்கான மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் கூறியதாவது:
 
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிட்கோ மூலம் 23 புதிய தொழிற்பேட்டைகள் நிறுவப்படும். திருச்சி மாவட்டத்தில் வாழவந்தான் கோட்டை மற்றும் கும்பக்குடி, தர்மபுரி மாவட்டத்தில் கடகத்தூர், திருவாரூர் மாவட்டத்தில் வைப்பூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்டரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே உள்ள முனியந்தாங்கல், மதுரை மாவட்டத்தில் சேடப்பட்டி, கோவை மாவட்டத்தில் திருப்பூர் அருகே உள்ள கண்டியங்கோயில் உள்ளிட்ட 23 இடங்களில் இந்த புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும்.
 
கிண்டி தொழிற்பேட்டையில் 1.91 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 765 சதுரஅடியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழிற்கூடம் கட்டப்படும்.  இந்த அடுக்குமாடி தொழிற்கூடமானது திறந்தவெளி தரைப்பகுதியுடன் 4 மாடிகளை கொண்டதாக இருக்கும்.
 
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை, மாதவரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்குடி ஆகிய பகுதிகளிலும் அடுக்குமாடி தொழிற்கூடங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
தேனியில் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கு நிலம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காட்பாடி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகள் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
 
மேலும், இவ்வாண்டில் கோயில்பட்டி, திருவெறும்பூர், கும்பகோணம், காரைக்குடி, கும்மிடிப்பூண்டி, வத்தலகுண்டு, ஆண்டிபட்டி உள்ளிட்ட 19 இடங்களில் உள்ள தொழிற் பேட்டைகளையும் மேம்படுத்த சிட்கோ திட்ட மிட்டுள்ளது என்றார் பொங்கலூர் பழனிச்சாமி.

 Other Articles
•  16 May 2008 02:44:00 'மோதி விளையாட' வரும் தனுஸ்ரீ தத்தா
•  16 May 2008 02:43:00 நயன்தாரா வள்ள்ள்ள்...விஷால் நாட் வெல்
•  16 May 2008 02:41:00 ஹெனின் திடீர் ஓய்வு
•  16 May 2008 02:36:00 உயிரிழப்பு ஐம்பதாயிரமாக அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது
•  16 May 2008 02:07:00 ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
•  16 May 2008 02:06:00 கருணாநிதி பதவி விலகவேண்டுமென்கிறார் ஜெயலலிதா
•  16 May 2008 02:01:00 'இந்தியன் முஜாஹிதீன்' உரிமை கோரியுள்ளது
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 18:11:00 கர்ப்பிணிகளுக்கு சூரியக் குளியல்
•  15 May 2008 17:29:00 மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 16:36:00 19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர்.
•  15 May 2008 16:31:00 பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டம-உளவுத்துறை எச்சரிக்கை
•  15 May 2008 16:16:00 5 ஒரு நாள் போட்டி தடை - ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ யின் தண்டனை
•  15 May 2008 16:07:00 சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு - ஜஸ்டின் ஹெனின்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions