சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்காவிட்டாலும் வழங்கப்படும் 100 மில்லியன் டொலர் கடனுதவியைக் கொண்டு அவர்கள் ஆயுதக் கொள்வனவுகளையே மேற்கொள்வதாக ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம. தி. மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று மதுரை சென்றார்.
அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு சிறிலங்கா அரசுக்கு உதவுகிறது. நான் பிரதமரை சந்தித்த போது நாங்கள் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்றார் பிரதமர். ஆனால் அங்கு அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து கொண்டிருக்கிறார்கள்.
பட்டினியால் வாடுகின்ற ஈழத் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக நண்பர் பழ. நெடுமாறன் உணவும் பொருள், மருந்து அனுப்ப அனுமதியளிக்க மத்திய அரசு மறுத்தது. ஆனால், சிறிலங்கா அரசுக்கு 100 மில்லியன் டொலர் கடன் கொடுக்கிறார்கள். இதை சிறிலங்ககா அரசு ஆயுதங்கள் வாங்குவதற்குத்தான் பயன்படுத்துவார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஒரு வேளை கையெழுத்து, போட வேண்டிய நிலை வரும் என கருதுகிறேன். அப்படி ஒரு துரோகச் செயலை மக்களுக்கு செய்தால் எங்களைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்பும் காங்கிரஸின் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்ற முடிவை கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்