News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

தொடர்ந்து இழுபறியில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்

08-05-2008
Article by:
Pradeep

இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவதில், தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிக் கட்சிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றன.
 
இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சேபணைகளைத் தீர்த்து வைக்கும் வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் எட்டாவது கூட்டம் செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்திலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
 
அணுசக்தி வழங்கும் நாடுகளின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னதாக, சர்வதேச அணுசக்தி அமைப்புடன் இந்தியா தொடர்பான பிரத்யேக பாதுகாப்பு உடன்பாடு எட்டப்பட வேண்டும். அதற்கு இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலை நேற்றைய கூட்டத்தில் அரசு கோரியது. ஆனால், இடதுசாரிக் கட்சிகள் அதுதொடர்பாக பல்வேறு விளக்கங்களைக் கேட்டிருக்கிறது.. அடுத்த கூட்டம் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்று அரசுத் தரப்புத் தகவல்கள் கவலை வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions