தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி முடிவடைந்தது.
6 லட்சம் பேர்
பிளஸ்-2 தேர்வை 1,600 தேர்வு மையங்களில் பள்ளிக் கூட மாணவ-மாணவிகள் 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 பேர் எழுதினார்கள். இவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 673 பேர்மாணவர்கள். 3 லட்சத்து 8 ஆயிரத்து 572 பேர் மாணவிகள். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகள்தான் அதிகம்.
சென்னை மாவட்டத்தில் மட்டும் 135 தேர்வு மையங்களில் 45 ஆயிரத்து 891 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 20 ஆயிரத்து 506 பேர் மாணவர்கள். 25 ஆயிரத்து 385 பேர் மாணவிகள்.
கூடுதல் நேரம்
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
புதிதாக இந்த வருடம் வினாக்களை படித்துப் பார்க்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
நாளை வெளியீடு
இந்த நிலையில் நாளை பிளஸ்-2 தேர்வு முடிவு
வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர்
தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி காலை வெளியிடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டை விட 2007-ம் ஆண்டு முன்கூட்டியே பிளஸ்-2 தேர்வு முடிவு மே 14-ந் தேதி வெளியிடப்பட்டது. அதை விட இந்த ஆண்டு 5 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படுகிறது.
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அந்தந்தபள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மார்க்கு தெரியும்
9-ந்தேதி காலை சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் அதே நேரத்தில், பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்ன தாக மார்க்குகளை எந்த
காரணம் கொண்டும் திறந்து பார்க்கக்கூடாது என்று பள்ளி களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.