இந்தியாவில் ஐந்து வயதுக்கும் குறைவாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்று பிரிட்டிஷ் உதவி நிறுவனமான சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கூறியுள்ளது.
ஐந்து வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், அந்த அறக்கட்டளை இந்தியாவை ஆப்பிரிக்காவிலுள்ள கானா மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகளுடன் பட்டியலிட்டுள்ளது.
இவ்வாறு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காத சிறார்களிடையே கூட பெண் குழந்தைகளின் நலத்துக்காக செலவிடப்படும் பணம் ஆண் குழந்தைகளுக்கானதை விட குறைவாகவே உள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிறுவர்களை விட சிறுமியரின் இறப்பு வீதம் கூடுதலாக இருக்கிறது என்றும், இதன் காரணமாக இந்த இரு பாலருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.