News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

பாக்.தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் முறியடிப்பு

09-05-2008
Article by:
uthsan s

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.

நேற்று நள்ளிரவுவாக்கில் இப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றனர். இதையடுத்து 112வது பட்டாலியன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். எல்லைப் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் 1000 ரவுண்டு சுட்டனர். மேலும் 16 கையெறி குண்டுகளையும் வீசினர்.

இதில் இந்தியத் தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சிைய வெற்றிகரமாக தடுத்து விட்டனர்.

இந்த சண்டையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனரா என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் பாகிஸ்தானியப் படையினருக்குத் தெரியாமல் ஊடுறுவல் முயற்சி நடந்திருக்க முடியாது என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமையை ஆய்வு செய்ய எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஆசிஷ் மித்ரா அங்கு விரைந்துள்ளார்.

 Other Articles
•  13 May 2008 13:23:00 துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவரின் கைக்குண்டு வெடிப்பு
•  13 May 2008 13:22:00 டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு
•  13 May 2008 13:21:00 மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்
•  13 May 2008 13:19:00 எனக்கே முதலமைச்சர் பதவி
•  13 May 2008 13:17:00 பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு
•  13 May 2008 13:09:00 எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன்
•  13 May 2008 09:57:00 "ராஜினாமா" பாக்.பிரதமருக்கு சர்தாரி வேண்டுகோள்
•  13 May 2008 09:47:00 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது
•  13 May 2008 09:43:00 கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : சோனியா இன்று பிரச்சாரம்
•  13 May 2008 09:41:00 'பாண்டி'யில் லாரன்சுடன் சினேகா போடும் 'கிக்' ஆட்டம்
•  13 May 2008 09:37:00 மல்லிகாவை 'காத்த' ரஜினி
•  13 May 2008 09:34:00 டிராவிட்டை நம்பியது தவறுமல்லையா மல்லையா
•  13 May 2008 09:30:00 விஜயகாந்த் தொண்டர்களால் இடைஞ்சலா?
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions