News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை

10-05-2008
Article by:
Pradeep

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டை உக்கிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் புலிகள் ஊடுருவிவிடாமல் தடுப்பதற்காக தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளை தாக்கல் செய்து பேசுகையில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :
 
இலங்கையில் இருந்து வரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு இலங்கைக்கு பொருட்களைக் கடத்திய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 2008 மார்ச் 31ம் தேதிவரை 14 இலங்கைத் தமிழர்கள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டு, 30 தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
 
அரசு எடுத்துவரும் கடும் நடவடிக்கை காரணமாக 48 இலங்கை தீவிரவாதிகள் உள்பட 139 கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடத்தல் நடவடிக்கைகளும் தீவிரவாத ஊடுருவலும் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளன.
 
தமிழக காவல்துறை ஒரு சிறந்த காவல்துறை என்ற தனிப்பெருமையை பெற்றுள்ளது.காவல்துறையின் நடவடிக்கையால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தலைதூக்கியுள்ள போதிலும் தமிழகத்தி்ல் காவல்துறை மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கை காரணமாக வன்முறை செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
 
அண்டை மாநிலங்களில் இருந்து தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற முயன்றபோது உடனுக்குடன் அவை தடுத்து நிறுத்தப்பட்டன.
 
காவல்துறையை நவீனமயமாக்க கடந்த நிதியாண்டில் ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.68 கோடிக்கு திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது. என்றாலும் பாதுகாப்புக்கும், அமைதியான சூழலுக்கும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய சவால்களை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
காவல்துறையினர் மக்களிடம் நட்போடு பழகும் முறையே அடிப்படை கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 Other Articles
•  13 May 2008 02:20:00 விரைவில் பில்லா பார்ட் டூ?
•  13 May 2008 01:53:00 கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2008
•  13 May 2008 01:50:00 தலைவர்கள் சிலை அவமதிப்பு, 'குண்டாஸ்' பாயும்
•  13 May 2008 01:32:00 உயர் கல்வி இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
•  13 May 2008 01:30:00 பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியில் விரிசல்
•  13 May 2008 01:27:00 ஆசிய மகளிர் கிரிக்கட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன்
•  13 May 2008 01:16:00 தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம் (மேலதிக தகவல்)
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 17:18:00 ஹிலாரி துணை ஜனாதிபதியாக போட்டியிட வாய்ப்பளிப்பேன் - ஒபாமா
•  12 May 2008 17:05:00 ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
•  12 May 2008 17:01:00 சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் டெண்டுல்கர்?
•  12 May 2008 16:51:00 அணு சக்தி ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளவேண்டும் -அப்துல் கலாம்
•  12 May 2008 16:45:00 டாடாவின் நானேவுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் ரூ. 1 லட்சத்துக்கு கார்
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions