News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

புலிகளுக்கு பொருட்கள் கடத்திய 4 பேர் கைது

10-05-2008
Article by:
uthsan s

ராமேசுவரத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், ஜவுளிகளை கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம் பாம்பன், தங்கச்சி மடம், தனுஷ்கோடி கடலோரப்பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தமிழக போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கடத்தல்காரர்கள் தங்கள் கைவரிசையை தொடர்ந்து காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது சூசையப்பர்பட்டினம் பகுதியில் ஒரு நாட்டுப்படகில் 4 பேர் பொருட்களை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களை சோதனையிட்டதில் படகிலிருந்த ஒரு மூட்டையில் 50 கிலோ எடையுள்ள அலுமினிய பவுடர் (வெடி பொருள் தயாரிக்க), இன்னொரு மூடையில் 25 புதிய கைலிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது படகு  பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்கள் தங்கச்சி மடத்தை சேர்ந்த படகு உரிமையாளர் சந்தியா (வயது 40), மீனவர்கள் கிறிஸ்துராஜா (34), ஜான் (33), ரோமன்ஸ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. விடுதலைப்புலிகளுக்கு இந்த பொருட்களை கடத்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.

மற்றொவர் கைது

இதே போல் நேற்று முன்தினம் பாம்பன் கடல் பகுதியில் 34 டின்களில் வெடிமருந்துகளும் மற்றும் அலுமினிய சல்பேட், பேட்டரிகள், ஜவுளிகள், கடத்த முயன்ற நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

 Other Articles
•  16 May 2008 10:41:00 குஷ்பு இடத்தை பிடிக்க முடியாது
•  16 May 2008 10:40:00 கேன்ஸைக் கலக்கிய அழகு
•  16 May 2008 10:29:00 ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
•  16 May 2008 10:26:00 குவைத் தேர்தலில் 27 பெண்கள் போட்டி
•  16 May 2008 10:24:00 மியான்மார் அரசியல் சட்டத்துக்கு 92 சதவீதம் பேர் ஆதரவு
•  16 May 2008 10:21:00 சென்னையில் 3 தீவிரவாதிகள் கைது
•  16 May 2008 10:15:00 கருணாநிதி இன்று ஆஸ்பத்திரியில் அனுமதி
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:05:00 தமிழீழ நுண்கலைப் பிரிவின் கலைவண்ணம் சஞ்சிகை வெளியீடு
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:53:00 ஜெய்ப்பூரா? அலறுகிறhர் வார்ன்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions