நீலகிரி மாவட்டத்தில் வருடம் தோறும் மே மாதம் கோடை விழா கொண்டாடப்படும். இந்த விழா இன்று (மே 10) துவங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
ரோஜா பூங்காவில் நடக்கும் இந்த கண்காட்சியையொட்டி நூற்றுக்கணக்கான ரக ரோஜா மலர் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோடை விழாவையொட்டி வரும் 13ம் தேதி காலை 11 மணிக்கு பைக்காரா படகு இல்லத்தில் படகு போட்டி நடைபெறுகிறது.
14ம் தேதி ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டி நடைபெறுகிறது.
15ம் தேதி கார்கள் அணி வகுப்பு நடைபெறும்.
17, 18ம் தேதிகளில் பொதுவான மலர் கண்காட்சி துவங்குகிறது. அப்போது பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் இன்னிசை கச்சேரி நடக்கிறது.
24, 25ம் தேதி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் ககண்காட்சி நடக்கிறது.
31ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி விழா நடக்கிறது.
நாளை முதல் 18ம் தேதி வரை ஊட்டி லாலி இனஸ்டியூட்டில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.