இந்திய அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மிர் பகுதியில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகளுடன் நடந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்முவுக்குத் தெற்கேயுள்ள சம்பா மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளை பின்னர் பாதுகாப்புப் படைகள் மடக்கிப் போரிட்டதில் இந்தியப் படையில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறுகிறது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நடவடிக்கை ஆரம்பமான பின் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியல் சண்டைகள் பெருமளவு குறைந்திருந்தன. சுமார் 20 ஆண்டு நடந்த கிளர்ச்சியின் அனல் அணைந்து போகாமல் இருக்க இன்னமும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லைக் கோட்டைத் தாண்ட முயன்று வருவதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.