கர்நாடக மாநிலத்தில் வருகிற 16 ம் தேதியன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி , இன்று அங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் 66 சட்டசபை தொகுதிகளில் வருகிற 16 ம் தேதியன்று நடைபெற உள்ளது.
இதனையொட்டி தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோப்பால் மற்றும் மங்களூரு ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் , தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், 3 ம் கட்ட தேர்தல் வருகிற 22 ம் தேதியன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.