13-05-2008
Article by:
uthsan s
தி.மு.க.ஆட்சி பொறுப்பை ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில்,இதையொட்டி சட்டசபையில் முதல்வர் கருணாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதையடுத்து,முதல்வர் கருணாநிதி சட்டசபையில் உரையாற்றியுள்ளார்.சட்ட சபையில் அவர் இன்று ஆற்றிய உரை உருக்கமானதாக இருந்ததாக தெரிவிக்கபடுகிறது.அவர் தனது உரையில்,தான் நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும்,அத்துடன் தலைவர்கள் ஒன்றுபட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும்,இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
|