இந்தியாவின் வடமேற்கிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில், இன்று மாலை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் ஜெய்ப்பூர் நகரின் ஜனசந்தடி நிறைந்த, பழைய நகர் பகுதியில் சில நிமிட இடைவெளியில் இந்தத் தொடர் குண்டுகள் வெடித்தன.
இந்தக் குண்டு வெடிப்புகள் மாலையில் வேலையிலிருந்து பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதோ, அல்லது கடை வீதிகளில் இருந்த போதோ இடம்பெற்றுள்ளன.