News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

கருணாநிதி இன்று ஆஸ்பத்திரியில் அனுமதி

16-05-2008
Article by:
Pradeep

முதலமைச்சர் கருணாநிதி கழுத்து வலி மற்றும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து திரும்பும் வரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நிதியமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
.
முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை திடீரென போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவர் மருத்துவ மனைக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவ பரிசோதனைக்காக சென்றாரா அல்லது அங்கு அனுமதிக்கப்பட்ட யாரையாவது பார்க்க சென்றாரா என்று பத்திரிகை வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் கிளம்பியது.

இதனிடையே இந்த தகவல் கேள்விப்பட்டு, அமைச்சர்கள் பலர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தனர். அமைச்சர்களின் வருகையால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கழுத்து வலி மற்றும் முதுகு வலி சிகிச்சைக்காக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும், அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் நிதியமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: முதல்வர் கருணாநிதி கடந்த சில நாட்களாக கழுத்துவலி மற்றும் முதுகுவலியால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்.

மருத்துவமனையில் சில நாட்களேனும் தங்கியிருந்து உரிய சிகிச்சையை பெற வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி சொன்னதன் காரணமாக இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை யில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே சிகிச்சை நிறைவடைந்து திரும்பும் வரை அவரை யாரும் தொந்தரவு செய்திட வேண்டாம் என்றும், அவர் நலம் பெற முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் அனைவரையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions