News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

அமைச்சர் பூங்கோதை ராஜினாமா ஏற்பு

20-05-2008
Article by:
Pradeep

"தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதையின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாகவும், அவரது இலாகா, கால்நடைத் துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார்.
 
ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.
 
இது தொடர்பான தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கடந்த 14 ம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்.
 
இருப்பினும் அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கருணாநிதி அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், பூங்கோதையின் ராஜினாமாவை முதலமைச்சர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு, அதனை ஆளுநர் பர்னாலாவுக்கு அனுப்பி வைத்தார்.
 
அதனை ஆளுனரும் ஏற்றுக் கொண்டு விட்டதாக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பூங்கோதை வகித்த சமூக நலத்துறை இலாகா, கால்நடைத் துறை அமைச்சரான கீத ஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
அதே சமயம் அவர் வகித்து வந்த கால்நடைத் துறை இலாகா , வனத் துறை மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டு, அவரது அமைச்சர் பதவியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
அவர் ஏற்கனவே வகித்துவரும் வனத் துறை மற்றும் ஊரக தொழில் துறைகலுடன் , கால்நடைத் துறை இலாகாவையும் சேர்த்து கவனிப்பார் என அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions