காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு ஒருநாள் தொடரில், மெல்போர்னில் வெள்ளியன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இலங்கையும் மோதுகின்றன.ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டு போய் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ள இலங்கை அணிக்கு, இப்போட்டியின் முடிவு எவ்வித நன்மையையும் தராது. இதனால் இந்த ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பையோ, சுவாரஸ்யத்தையோ ஏற்படுத்தாது எனலாம்.
எனினும், இத்தொடரில் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இலங்கை, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் தேடிக்கொள்ள முயற்சி மேற்கொள்ளும்.
ஆஸ்திரேலிய தரப்பில், இறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி காலை 8.45 மணிக்கு தொடங்குகிறது.