மெல்பர்னில் நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரன் குவிக்க இயலாமல் இலங்கை அணி திணறி வருகிறது. இந்தப் போட்டியில் டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
.
27 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. துவக்க ஆட்டக்காரர் பெரேரா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரெட்லீ பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஜெயசூர்யா 23 ரன்கள் எடுத்த நிலையில் பிரேக்கன் பந்து வீச்சில் ஹசியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்கீப்பர் சங்ககாரா 11 ரன்களுக்கும், அவரை தொடர்ந்து கபுகடேரா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஹைடனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிராடு ஹாடின் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியில் சமிந்தா வாசுக்கு பதிலாக நுவான் குலசேகரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் அது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமையும்.