ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு, அந்த அணிக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்க வேண்டியுள்ளது என்றும், அதற்காக இந்திய இளம் அணி சிறப்பாக விளையாடும் என்றும் கேப்டன் தோனி தெரிவித்தார்.
காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு ஒருதினப் போட்டியின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் இறுதி ஆட்டம் நாளை சிட்னியில் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு கையாளப்படவுள்ள உத்தி குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறுகையில், 'எந்த அணியையும் நெருக்கடிக்கு ஆளாக்கும் வகையில் விளையாடுவது ஆஸ்திரேலிய அணியின் பாணி. இந்த முத்தரப்பு தொடரில் அந்த அணிக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.அவர்கள் வழியிலேயே சென்று கோப்பையைக் கைப்பற்ற முயல்வோம்' என்றார்.
மேலும், நாளையை போட்டியில் டாஸ் மிகவும் முக்கியம் என்ற அவர், முதலில் பேட் செய்வதே சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.