துபாய் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர்-1 வீராங்கனை ஜஸ்டின் ஹெனின், காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்கா சச்சியாவோனுடன் மோதிய ஹெனின், 7-6, 7-6 என்ற நேர் செட்களில் போராடி தோல்வியுற்றார்.
இப்போட்டியில் அதிக தவறுகளை செய்தததால், தோல்வியடைந்ததாக போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசி ஹெனின் தெரிவித்தார்.
சச்சியாவோனின் தவறுகளை தனக்கு சாதகமாக மாற்ற முடியவில்லை என வருத்தம் தெரிவித்தாலும், அவரது ஆட்டம் சிறப்பாக இருந்ததாக ஹெனின் பாராட்டியுள்ளார்.
துபாய் ஓபன் பட்டத்தை 4 முறை வென்ற ஹெனின் காலிறுதிச் சுற்றில் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.