சான்டிகோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி ஹாக்கிப் போட்டியில் ஆஸ்திரியாவை 73 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டம் தொடங்கிய முதல் இரண்டாவது நிமிடத்தில் ஆஸ்திரியா தனது முதல் கோலை போட்டது.
இருந்த போதிலும் இந்தியாவின் திலிப் டிர்கி, சிவேந்திர சிங் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், இக்னேஸ் டிர்கி, பரத் சிகாரா, ராஜ்பால்சிங் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஆஸ்திரியா தரப்பில் இரண்டு பெனல்டி கார்னர்களை கிறிஸ்டியன் மினார் கோல்களாக மாற்றினார். இந்த தகுதிச் சுற்று போட்டியில் இந்திய ஹாக்கி அணி பெற்றுள்ள இரண்டாவது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.