முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களான செரீனா மற்றும் வீனஸ் சகோதரிகள், பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர். செவ்வாயன்று நடந்த இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- வீனஸ் வில்லியம்ஸ் இணை, ஆண்ட்ரே எரித் (ருமேனியா)- தமரின் தனாசுகன் (தாய்லாந்து) இணையை எதிர்கொண்டது.
சுமார் 94 நிமிடங்கள் வரை நடந்த இப்போட்டியில் 7- 6, 6- 4 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, வில்லியம்ஸ் சகோதரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.