ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இங்கிலாந் திடம் இந்தியா தோல்வி அடைந்தது.ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பிரிவு போட்டி சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோ நகரில் நடந்து வருகிறது. இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ரவுண்ட்ராபின் முறை யில் நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்திடம் மோதியது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இëங்கிலாந்து வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா-மெக்சிகோ அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. இன்னொரு போட்டியில் ரஷியா-சிலி அணிகள் மோதின. இதில் ரஷியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. 3 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. நாளை நடக்கும் போட்டியில் சிலியுடன் மோதுகிறது.
இங்கிலாந்து 4 போட்டி களிலுமே வெற்றி பெற்று போட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரியா, அணிகள் தலா 9 புள்ளிகளும், சிலி, ரஷியா அணிகள் தலா 3 புள்ளிகளும் பெற்றுள்ளன. மெக்சிகோ அணி இதுவரை சந்தித்த 4 போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஒரு புள்ளி கூட பெறவில்லை.