சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து, இப்போது நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்றைய நிலையில், ஓய்வு பெறுவது பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. மீடியாவில்தான் இது பற்றி பல வதந்திகள் வருகின்றன.
நான் ஓய்வு பெறப்போவது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்! என்னைப் பொறுத்தவரை நான் ஓய்வுபெறப் போவதில்லை.
விமர்சித்து எழுதப்படும் கட்டுரைகளை படிப்பதே இல்லை. அதனால்தான் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எது சரி, எது தவறு என்பதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் உள்ளது. உண்மையான நண்பர்கள் எனக்கு உடனடியாகப் போன் செய்து தவறை சுட்டிக் காட்டுவார்கள். இளம் வீரர்களுடன் விளையாடுவது புத்துணர்வு அளிக்கிறது.
இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.