பர்க்ளே துபாய் டென்னிஸ் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸ்சின் மார்க் நவ்லெஸ் இணை முன்னேறியது.
இப்போட்டிகளின் தரநிலையில் 4-ம் இடத்தில் உள்ள இந்த இணை தனது அரையிறுதிச் சுற்றில், ஸ்வீட்னின் சைமன் அஸ்பெலின் - ஆஸ்திரியாவின் ஜூலியன் நோல் இணையை எதிர்கொண்டது.
இதில், பூபதி - நவ்லெஸ் இணை 6-2, 6-0 என்ற நேர் செட்களில், இப்போட்டிகளின் தரநிலையில் 2-ம் இடத்திலுள்ள ஸ்வீடன் - ஆஸ்திரிய இணையை தோற்கடித்து முன்னேறியது.
இதைத் தொடர்ந்து இந்த இணை தனது இறுதிச் சுற்றில், தரநிலையில் 3-ம் இடத்திலுள்ள செக். குடியரசின் மார்டின் டாம் - பவேல் வின்சர் இணையை எதிர்கொள்கிறது.
செக். குடியரசு இணை தனது அரையிறுதிச் சுற்றில், 6-3, 7-6 (8/6) என்ற செட் கணக்கில் தரநிலையில் முதலிடத்தில் உள்ள கனடாவின் டானியல் நெஸ்டர் - செர்பியாவின் நெனாட் ஸிமோன்ஜிக் இணையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.