6 நாடுகள் பங்கேற்ற ஒலிம் பிக் தகுதி சுற்று ஆக்கி போட்டி சிலி தலைநகர் சாண்டியா கோவில் நடைபெற்று வருகி றது. இந்திய அணி கடைசி `லீக்' ஆட்டத்தில் சிலியை எதிர் கொண்டது. இந்திய நேரப் படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த ஆட்டம் நடந்தது. வெற்றி பெற வேண்டிய முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ரகுநாத் 2 கோலும் (23 மற்றும் 61-வது நிமிடம்), பிரப்ஜோத்சிங் (9-வது நிமிடம்), பரத் (24-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுமாப
மற்ற ஆட்டங்களில் இங்கி லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவையும், ரஷியா 9-1 என்ற கணக் கில் மெக்சிகோவையும் தோற் கடித்தன.
இந்திய அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியும். இத னால் ஆக்கி அணிக்கு வாழ்வாப சாவாப என்ற நிலை உள்ளது. இந்திய அணி `லீக்' ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. இதனால் இங்கிலாந்தை வீழ்த்த இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும்.
8 முறை ஒலிம்பிக் சாம் பியனான இந்தியா ஒலிம் பிக் வரலாற்றில் இது வரை தகுதி பெறாமல் இருந் தது இல்லை. இந்த ஆட்டம் டென்ஸ்போர்ட்ஸ் டெலிவிஷ னில் நேரடியாக ஒளிபரப்பு
செய்யப்படுகிறது.